சின்னத்திரையின் முன்னணி தொலைகாட்சிகளில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராகவும், நடுவராகவும் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் சாண்டி மாஸ்டர். தன்னுடைய சிறந்த நடனத்தால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சாண்டி மாஸ்டர் தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.

விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3-இல் போட்டியாளராக கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று  இறுதிச்சுற்றில் இரண்டாம் பரிசு வென்றார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக 3:33 படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் திரைப்படமான 3:33 திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாண்டி மாஸ்டரின் புதிய மியூசிக் வீடியோ  இன்று வெளியானது.

இசையமைப்பாளர் ஓஃப்ரா இசையமைத்துள்ள செம்ம போத பாடலுக்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். சாண்டி மாஸ்டரின் அசத்தலான நடனத்தில் வெளிவந்திருக்கும் செம்ம போத பாடல் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கலக்கலான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.