தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் முதல் மூன்று சீசனில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசன் ஜூலையில் தொடங்கவிருந்தது,கொரோனா தாக்கத்தால் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலையில் நடைபெறவிருந்த இந்த தொடரின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

இந்த தொடரையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.ஒருவழியாக அக்டோபர் 4ஆம் தேதி பிரம்மாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.ஜித்தன் ரமேஷ்,ரேகா,ஷிவானி நாராயணன்,ரியோ ராஜ்,சுரேஷ்,அனிதா சம்பத்,ஆரி,கேப்ரியல்லா,பாலாஜி,அறந்தாங்கி நிஷா,ஆஜித்,ரம்யா பாண்டியன்,சோமசேகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளராக இருந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரியோ.இவர் தொகுத்து வழங்கிய நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் உள்ளிட்ட தொடர்கள் ஹிட் அடித்தது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இவர் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் பெண் குழந்தை சமீபத்தில் பிறந்தது.

ரியோ பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அவர் மனைவி ஸ்ருதியின் பிறந்தநாள் சமீபத்தில்  முடிந்தது.இதற்காக ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ரெடி செய்துள்ளார் ரியோ.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Sruthi Ravi Rio (@sruthi.rav)