விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நடிகர் கவின் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும், பிரபலமான மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கிய நடிகர் கவின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் லிப்ட். ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் லிப்ட் திரைப்படத்தை இயக்குனர் வினித் வரப்பிரசாத் எழுதி இயக்கியுள்ளார்.

ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹெப்ஸி தயாரித்திருக்கும் லிப்ட் திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜி.மதன் படத்தொகுப்பு செய்துள்ள லிப்ட் திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். 

முன்னதாக லிப்ட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய  இன்னா மைலு எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இன்னா மயிலு பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. லிப்ட் படத்தின் கலகலப்பான இன்னா மயிலு வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.