தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகராக,தொகுப்பாளராக, வலம்வந்த கவின், க்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

ஈகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் ஹெப்ஸி தயாரிப்பில் ஹாரர்-த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் லிப்ட் திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார்.லிப்ட் திரைப்படத்தை இயக்குனர் வினித் வரப்பிரசாத் எழுதி இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா ஒளிப்பதிவில் ஜி.மதன் படத்தொகுப்பு செய்துள்ள லிப்ட் திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து ஆகாஷ்வாணி எனும் ரொமாண்டிக் வெப்சீரிஸிலும் நடித்துள்ள கவின், இயக்குனர் நெல்சன் தில்ப் குமார் இயக்கத்தில் டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கவின் நடித்த லிப்ட் படத்திலிருந்து புதிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.