அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜ் ஃப்ளாய்டு எனும் கருப்பர், வெள்ளை நிற போலீசார் ஒருவரால் நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை கிளப்பியது. Black Lives Matterக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக பல திரைப்பிரபலங்கள் இதற்கு குரல் கொடுத்தனர். மேலும் கருப்பு நிறத்தால் மை பூசிக்கொண்டு போட்டோஷூட்டுகள் நடத்தினர். தற்போது இந்த பட்டியிலில் பிக்பாஸ் புகழ் ஜூலி இணைந்துள்ளார். 

செவிலியரான ஜூலி, மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார். அந்த புகழ் அவரை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. வீரத்தமிழச்சி என்ற பெயரையும் பெற்று தந்தது. அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நுழைந்தார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழு நேர நடிகையாகவும் மாறி விட்டார் ஜூலி. 

ஜூலிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இச்செய்தி உண்மையில்லை இதை யாரும் நம்பவேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வலியுறுத்தினார் ஜூலி. ஜூலி பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் பயோபிக் படம், அம்மன் தாயி படம் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடிகை ஜூலி நடித்துள்ளார். இந்நிலையில், உடல் முழுவதும் கருப்பு நிற மை பூசிக் கொண்டு படு பயங்கரமான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் ஜூலி. சமூக வலைத்தளங்களில் ஜூலி பகிர்ந்த இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும், இந்த போட்டோஷூட்டை நடிகை ஜூலி ஒரு உயர்ந்த காரணத்திற்காகவே எடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். Black Lives Matterக்கு ஆதரவாக தனது சிறு முயற்சி என்றும், நிறத்திற்காக ஒரு மனிதரை வெறுப்பது என்பது கொடுமையான செயல், கருப்பும் ஒரு நிறம் தான் என்றும், கருப்பின மக்களுக்காக தன்னால் முடிந்த ஒரு சிறு செயல் இது என்றும் கேப்ஷன் தந்துள்ளார்.