தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் . மேலும் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரந்து தமிழ் சினிமாவில் நடிகர் மகத் கதாநாயகனாக நடித்திருக்கும் இவன் உத்தமன் , பிக்பாஸ் ஆரவ் கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜ பீமா மற்றும் இயக்குனர்  S.J.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் கடமையை செய் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். 

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் அதிவேகமாக காரில் சென்ற யாஷிகா ஆனந்தின் கார் சாலையில் உள்ள தடுப்பில் மோதி, கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பாவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்துக்கு இடுப்பு மற்றும் காலில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டது.

இதனையடுத்து பல்வேறு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் யாஷிகா ஆனந்துக்கு மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோர விபத்தின் காரணமாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா ஆனந்த், 95 நாட்களுக்குப் பிறகு, முதல் முறையாக இன்று மருத்துவமனையில் நடக்க முயற்சி செய்தார். இன்று நடக்க முயற்சி செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…