தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை வனிதா மீண்டும் நான் ராஜாவாகப் போகிறேன் திரை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

பிறகு  வனிதா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் இவரே தயாரித்து எழுதிய எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து சின்னத்திரையில் நுழைந்த வனிதா விஜயகுமார் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

தொடர்ந்து சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 1-ல் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்ற வனிதா விஜயகுமார் சில காரணங்களுக்காக அந்த போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு எடுத்த ஒரு புகைப்படத்தையும் அதனோடு ஒப்பிட்டு தற்போது இருக்கும் அதே உடையில் இருக்கும் மற்றொரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மூன்று மாதத்தில் எடையை குறைத்து புதிய லுக்கில் வனிதா விஜயகுமார் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை வனிதா விஜயகுமார், அடுத்ததாக அனல்காற்று, 2K அழகானது காதல், அந்தகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.