பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான வெய்யில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வசந்தபாலன். தொடர்ந்து அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் என தமிழ் சினிமாவிற்கான சிறந்த படைப்புகளை கொடுத்து வருகிறார்.

தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் ஜெயில்.இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயில் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து இயக்குனர் வசந்தபாலன் தனது புதிய திரைப்படத்தை துவங்கினார். இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் அர்ஜுன் சிதம்பரமும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் வசந்தபாலன் தீவிர சிகிச்சைக்குப்பின் மீண்டு வந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்த இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது