பிரபல மாடல் ஆக இருந்து பின்னர் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷன் தியாகராஜன்.சில விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக பிக்பாஸ் தமிழ் சீசன் 3யில் பங்கேற்று அசத்தினார் தர்ஷன்.மேலும் பல ஆல்பம் பாடல்களில் நடித்தும் பிரபலமானார் தர்ஷன்.

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் பிரபலமான ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் இருந்தது.இந்த சீசன் மூலம் பலரும் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றனர்.அதில் முக்கியமான ஒருவர் தர்ஷன்,தனது குணத்தால் பல ரசிகர்களை பெற்று பிரபலமானவராக மாறினார்.இந்த தொடரின் வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடைசிக்கட்டத்தில் வெளியேறினார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் சில ஆல்பம் பாடல்கள் மற்றும் சில படங்களில் தர்ஷன் நடித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதில் இவர் நடித்துள்ள கூகுள் குட்டப்பா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடித்துள்ளார்.கே எஸ் ரவிக்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் தர்ஷன்,தற்போது தனது ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தர்ஷன்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant)