தமிழ் சினிமாவில் நடிகையாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி சின்னத்திரையை கலக்கி வருபவர் அபிநயா.விஜய்,சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு,கன்னடா,மலையாளம் மொழிகளிலும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்து அசத்தியுள்ளார் அபிநயா.நடிப்பிற்காக சில விருதுகளையும் வென்றுள்ளார் அபிநயா.

டான்சில் ஆர்வம் கொண்ட இவர் நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சினிமாவில் கலக்கிய இவர் அடுத்ததாக ஜீ தமிழில் நடைபெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார்.அபி டான்ஸ் கம்பெனி என்ற பெயரில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார் அபிநயா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து அசத்தியிருந்தார் அபிநயா.தெலுங்கில் நடந்து முடிந்த பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6-ல் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் சிறிது நாட்கள் மட்டுமே இருந்தாலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தார் அபிநயா.

இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.பல வருடங்களாக சினிமா,சின்னத்திரை,சீரியல் என பல துறைகளில் கலக்கி வரும் அபிநயா தனது அடுத்தகட்ட பயணத்திலும் பல திட்டங்களை வைத்துள்ளார்.இவரது அடுத்தகட்ட திட்டடங்கள் வெற்றியடைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.