கோலாகலமாக நிறைவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6... டைட்டிலை எட்டிப்பிடித்த அசீம் - விக்ரமன் RUNNER UP! விவரம் உள்ளே

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் வின்னரானார் அசீம்,Bigg boss tamil season 6 title winner azeem runner up vikraman | Galatta

தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஒவ்வொரு வருடமும் ரசிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். வழக்கம்போல் ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல்முறையாக 20 போட்டியாளர்கள் களமிறங்கினர்.

GP முத்து (யூட்யூபர்), அஸீம் (சீரியல் நடிகர்), அசல் கோலார் /வசந்த் (இசைக்கலைஞர் / பாடகர்), ஷிவின் கணேசன் (திருநங்கை - பொது ஜனம்), ராபர்ட் மாஸ்டர் (நடன இயக்குனர்), ஷெரினா (மாடல்), ராம் ராமசாமி (மாடல் / நடிகர்), ஜனனி (இலங்கை - செய்தி வாசிப்பாளர்), ADK-ஆர்யன் தினேஷ் கனகரத்னம் (இலங்கை - இசைக்கலைஞர் / RAP பாடகர்), அமுதாவாணன் (STAND UP காமெடியன் / நடிகர்), VJ மகேஷ்வரி (தொகுப்பாளர் / நடிகை), VJ கதிரவன் (தொகுப்பாளர்), ஆயிஷா (சீரியல் நடிகை), தனலக்ஷ்மி (டிக்டாக்கர் - பொது ஜனம்), ரச்சிதா மகாலக்ஷ்மி (சீரியல் நடிகை), மணிகண்டா ராஜேஷ் (நடிகர் -ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்), சாந்தி அரவிந்த் (நடன இயக்குனர் / நடிகை), விக்ரமன் (அரசியல்வாதி-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்) / முன்னாள் அரசியல் தொகுபாளர் -கலாட்டா), குயீன்ஸ் ஸ்டான்லி (வளரும் நடிகை), நிவிஷினி (சிங்கப்பூர் மாடல் - பொது ஜனம்) ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர்.

இவர்கள் தவிர வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல நடிகை மைனா நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இவரைத் தவிர இந்த சீசனில் வேறு யாரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையவில்லை அதேபோல் எவிக்ட் ஆனவர்களும் ரீ-என்ட்ரி கொடுக்கவில்லை.

பரபரக்கும் விவாதங்களோடும் காரசாரமான மோதல்களோடும் நகர்ந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் TICKET TO FINALEவை அமுதவாணன் வென்றார். இருப்பினும் இறுதி போட்டிக்கு முன்பாக பிக் பாஸ் கொடுத்த 11.75 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் முன்னதாக கதிரவன் மூன்று லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறுதி கட்டத்திற்கு மைனா ஷிவின் விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் இருந்த நிலையில் இறுதி நாளுக்கு முந்தைய நாளில் மைனா 3வது RUNNER UPஆக அறிவிக்கப்பட்டது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் கோலாகலமான பிக் பாஸ் தமிழ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நேற்று (ஜனவரி22) நடைபெற்றது. இதில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த ஷிவின் 2வது RUNNER UPஆக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்க அசீம் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்தார். 

ஆரம்பம் முதலே தனது நல்ல கொள்கைகளை முன்னிறுத்தி மிகச் சிறப்பாக விளையாடி மக்களின் மனம் கவர்ந்த விக்ரமன் RUNNER UPஆக இரண்டாம் இடம் பிடித்தார். தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. எனவே கடந்த ஆண்டு(2022) தொடங்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மறக்க முடியாத நாள்… பெற்றோர்கள் ஆகப்போகும் அட்லீ-பிரியாவின் வீட்டு விசேஷம்-ட்ரெண்டாகும் புதிய புகைப்படங்கள்!
சினிமா

மறக்க முடியாத நாள்… பெற்றோர்கள் ஆகப்போகும் அட்லீ-பிரியாவின் வீட்டு விசேஷம்-ட்ரெண்டாகும் புதிய புகைப்படங்கள்!

ஜவான் படத்தில் ஷாருக்கானின் நடிப்பு குறித்து முதல் முறை மனம் திறந்த அட்லீ! அதிரடி பதிவு இதோ
சினிமா

ஜவான் படத்தில் ஷாருக்கானின் நடிப்பு குறித்து முதல் முறை மனம் திறந்த அட்லீ! அதிரடி பதிவு இதோ

பரபரக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு… ட்ரண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!
சினிமா

பரபரக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு… ட்ரண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!