பிக்பாஸ் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று.இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அக்டோபர் 9ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்களையும் நட்சத்திரங்களாக இந்த நிகழ்ச்சி மாற்றியுள்ளது.

2017-ல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக ஐந்து சீசன்கள் கடந்து பெரிய ஹிட் நிகழ்ச்சியாக உள்ளது.பட்டிதொட்டி எங்கும் இந்த நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.ஐந்து சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்,ஆறாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார்,அக்டோபர் 9ஆம் தேதி இந்த சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.ஜி பி முத்து,ரச்சிதா,மஹேஸ்வரி,கதிரவன்,ராபர்ட் மாஸ்டர்,அசீம் என பல தெரிந்த முகங்களுடன் புது முகங்கள் சேர்ந்து மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

நிகழ்ச்சி ஒளிபரப்பை தொடங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது,முதல் வாரத்திலேயே டாஸ்க் கொடுத்து இந்த சீசனின் விறுவிறுப்பை அதிகரித்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அசீம்,மகேஷ்வரி,சிவின் கணேசன் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இரண்டாவது நாளே சண்டையை ஆரம்பிச்சுட்டாங்க என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.