விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் மலர் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.பல மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது.

முதல் மூன்று சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து கொரோனா வர நான்காவது சீசன் பிக்பாஸ் தள்ளிப்போனது.ஒருவழியாக சில மாதங்களுக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் தொடரின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.இதற்கான சில ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளன.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குறித்த தகவல்கள் பரவி வருகின்றனர்,எப்போதும் இருப்பது போல பல போட்டியாளர்கள் பெயர்கள் வதந்திகளா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர்.தற்போது ஒரு புதிய ப்ரோமோவுடன் ஒளிபரப்பு தேதியை அறிவித்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது போட்டியாளர்கள் விவரம் உள்ளிட்டவை தொடக்க நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.