பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருவது வாடிக்கையாக உள்ளது. அப்படி ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல், வாரம் முழுக்க நடக்கும் சம்பவங்கள் குறித்து விசாரித்து யார் யாருக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் கொடுப்பார்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரே வாரத்தில் டபுள் எவிக்ஷனாக ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு ஆரியிடம் பாலாஜி நடந்து கொண்ட விதத்தை பார்த்து அவரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதனால் கடந்த வாரங்களில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. என்ன செஞ்சிட்டாங்க இவங்க. என்ன தகுதி இருக்கு இவங்களுக்கு இங்க வர, எதன் அடிப்படையில் இவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்கிற கேள்வி பலருக்கும் இருப்பதை நான் உணர்கிறேன். அதற்கான பதிலை வீட்டில் உள்ளே இருப்பவர்கள் சொல்லி இருக்காங்க.

இறுதி போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதற்கு முன்பாகவே ஒருவர் வெளியேறியாக வேண்டும். அது யார். இன்று இரவு என கமல் கூறி இருக்கிறார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

தற்போது இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், சோம் சேகர் நேரடியாக ஃபைனல்ஸ் செல்வது காட்டப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 4-ன் முதல் இறுதி போட்டியாளர் என்ற பெருமையை பெற்ற சோம் சேகருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கமல் ஹாசன் வாழ்த்து கூறியது மட்டுமல்லாமல், சோமின் தாயார் பேசும் வீடியோ கிளிப்பை அகம் டிவி வழியே காண்பித்தார். இதை பார்த்த சோம் ஆனந்த கண்ணீருடன் அமர்ந்துள்ளார்.