பிக் பாஸ் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த வாரம் ஃபைனல் நடைபெற உள்ள நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கிறார்கள். அவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு Ticket to Finale என்ற ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்குகளின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்று ஜெயிப்பவர்களுக்கு இந்த Ticket to Finale வழங்கப்படும். சோம் சேகர் தான் இதில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து இருக்கிறார். அதனால் அவர் தான் முதல் ஆளாக பைனலுக்கு சென்றிருக்கிறார்.

மேலும் வாக்குகளின் அடிப்படையில் ஷிவானி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது . அவர் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்குகளில் மிக சிறப்பாகவே விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நேற்றைய எபிசோடில் அவர் டிக்கெட் டு ஃபினாலே இறுதி டாஸ்கில் கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் விளையாடி இருந்தது காட்டப்பட்டு இருந்தது. 

ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி இருவரும் வலியை பொறுத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அந்த டாஸ்கில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது சிங்கப்பெண்ணே பாடலை போட்டு அவர்களை பிக் பாஸ் நெகிழ்ச்சியாகி இருந்தார். அவர்கள் இருவரும் கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் போராடி இருப்பதற்கு பிக் பாஸ் ரசிகர்கள் அதிகம் பாராட்டுகளை கொடுத்து வருகின்றனர். இருப்பினும் ஷிவானி வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட உள்ளார் என இணையத்தில் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இன்றைய நாள் நிகழ்ச்சியின் இறுதியில் தான் தெரியவரும். 

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றியும், கடைசி எவிக்ஷன் பற்றியும் கமல் ஹாசன் பேசியுள்ளார். என்ன செஞ்சிட்டாங்க இவங்க..எதன் அடிப்படையில் ஓட்டு போடுவாங்க என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கும், அதற்கான பதிலை வீட்டுக்குள் இருப்போர் கூறியுள்ளார்கள். இறுதி போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது என்று கூறியிருக்கிறார் கமல் ஹாசன்.