பிக் பாஸ் 4வது சீசனில் ஆரம்பம் முதலே பாலாஜி மற்றும் ஆரிக்கு இடையே தான் அதிக அளவு பிரச்சனைகள் வந்திருக்கிறது . அதனால் அவர்கள் இருவரும் தான் அடிக்கடி வாய் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லும் வகையிலான டாஸ்க் தான் வழங்கப்பட்டு உள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் ஆரி மற்றும் பாலாஜியை தான் குறை கூறினார்கள்.

ஊருடன் ஒட்டி வாழ், துன்பம் மற என பல்வேறு டைட்டில்களை ஆரி மற்றும் பாலாஜிக்கு தான் கொடுக்கப்பட்டு இருந்தது. இது பற்றி பாலாஜி சற்று காட்டமாக பேசி இருக்கிறார். எங்க இரண்டு பேருக்கு நடுவில் பிரச்சனை அதனால் மற்றவர்களுக்கும் எங்களுடன் பிரச்சனை என்பது போல தான் கேம் சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போல நானும் அவரும் தான் கெட்டவர்கள் இந்த வீட்டில்.

சில சம்பவங்களை மட்டும் எடுத்துவந்து கருத்து பதிவு செய்வது போல இருக்கிறது. Safe game நானும் விளையாடவில்லை, கண்டிப்பாக அவரும் விளையாடவில்லை. இந்த இடத்தில் safe game விளையாடாதது இந்த இடத்தில் நிறைய பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் நானும் ஒருவன் என பாலாஜி பேசி இருக்கிறார்.

இதை ரம்யாவை குறிவைத்து தான் பாலாஜி சொல்லி இருக்கிறாரோ என்பது போல ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. அதனால் பாலாஜியை தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் ஆரி மற்றும் ரம்யா இடையே மோதல் வெடித்து இருக்கிறது. ரம்யா நேற்று பேசும்போது நான் safe game விளையாடுகிறேன் என சொன்னார் என ஆரி சொல்ல, நான் அப்படி சொல்லவே இல்லை one sided என்று மட்டும் தான் சொன்னேன் என ரம்யா விளக்கம் தந்தார். 

ரம்யா இப்படி இடையில் பேசியதால் கோபமான ஆரி, நான் பேசும்போது நீங்கள் இடையில் பேச கூடாது. அது தான் விதியிலும் இருக்கிறது. என்னிடம் பேசும்போது நான் ஒருத்தரிடம் கூட நான் பதில் பேசவே இல்லை. இது தான் பிரச்சனை என விமர்சித்து இருந்தார்.