பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் எவிக்ஷன் புராசஸுக்கான நாமினேஷன் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுவது இன்றைய முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டிருந்தது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக ஓபன் நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது. 

இதற்காக ஹவுஸ்மேட்ஸ் லிவிங் ஏரியாவில் உள்ள பிளாஸ்மா முன்பு வந்து நின்று சக ஹவுஸ்மேட்ஸ் இருவரை நாமினேட் செய்கின்றனர். இதில் முதலில் நாமினேட் செய்யும் ஆரி, ரியோவின் பெயரை கூறினார். அதற்கு காரணமாக தனக்கும் பாலாவுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து ரியோ பேசியதையும் அதற்கு தான் விளக்கம் கேட்டேன் அதிலும் எனக்கு முழு திருப்தியில்லை என்று கூறியிருந்தார். 

அதனை தொடர்ந்து வந்த சோம் முதலில் எல்லோரையும் க்ளாப் பண்ண சொல்லியிருந்தார். பின்னர் பாலாவையும் ஆரியையும் நாமினேட் பண்ணும் சோம், ஆரி கோபத்தில் சில வார்த்தைகளை விட்டுள்ளார், அதை தவிர்க்க வேண்டும். இங்கே மட்டும் இல்ல வெளியேவும்தான் என காரணம் கூறினார். 

அடுத்து வந்த ரியோ, பொண்ணு வரும் போது கூட அந்த மனுஷன் அப்படி ரூல்ஸ ஃபாலோ பண்ணியிருக்காரு. இவன் அதை பார்க்காம இதை போய் சொல்லியிருக்கானேன்னு நான் ஒரு இடத்துல தப்பா தெரியருதுக்கு வாய்ப்பு இருக்கு. நான் அந்தளவுக்கு கேவலமானவன் இல்ல என்றார். ஆனால் ரியோ யாரை நாமினேட் செய்கிறார் என்பது தெரியவில்லை. இருந்த போதும் அவர் ஆரியை நாமினேட் செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

இதன்மூலம் இந்த வாரம் ஆரி நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறலாம் என தெரிகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இந்தவார கேப்டனாக ரியோ தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை என்பதும் அவரை சக ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்வதும் இன்றைய முதல் ப்ரோமோவில் தெரியவந்தது.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஆரி பயமுறுத்துறாரு....அவர் மேல எக்ஸ்ட்ரா கோவம் வருது என கேபியிடம் புலம்புகிறார் ரியோ. ரியோ சொல்வதை கேட்டுக்கொண்டே உணவு எடுத்துக்கொண்டார் கேபி. பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு ஆரி மீது அப்படி என்ன தான் கோபம் என்று கமல் ஹாசனும் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களிலாவது இந்த சண்டை மாறுமா ? என்ற ஆவலில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.