பிக்பாஸ் 4 : இந்த வார நாமினேஷனில் ரியோவை நாமினேட் செய்த ஆரி !
By Sakthi Priyan | Galatta | January 04, 2021 09:26 AM IST

பிக் பாஸ் பாஸ் நான்காவது சீசன் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது.அதனால் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பது பற்றி பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது. அதிலும் ஆரி மற்றும் பாலா இடையே நடக்கும் மோதல் தற்போது எல்லைமீறி சென்று கொண்டு இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க நேற்று ஷோவில் இருந்து ஆஜித் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த வார நாமினேஷன் இன்று பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று இருக்கிறது. எதிர்பார்த்தது போலவே ஓபன் நாமினேஷன் தான் நடைபெற்றது. முதல் ஆளாக ரியோவை நாமினேட் செய்தார் ஆரி. கடந்த வாரம் நடந்த பிரச்னையை தான் அவர் காரணமாக காட்டினார். அதன் பின் ரியோவும் பதிலுக்கு ஆரியை நாமினேட் செய்து இருக்கிறார்.
ஆரியின் மகள் வந்தபோது அவர் ரூல்ஸை பின்பற்றி இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் பார்க்காமல் வேறு எதையோ சொல்கிறார் என என்னை பற்றி தவறாக நினைப்பார்கள். நான் அந்த அளவுக்கு கேவலமானவன் இல்லை என ரியோ தனது ஆதங்கத்தை பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் சோம் சேகர் ஆரி மற்றும் பாலாஜியை நாமினேட் செய்து இருப்பதும் இன்றைய முதல் ப்ரொமோ விடீயோவில் காட்டப்பட்டு உள்ளது. அதனால் இந்த வாரம் ஆரி மற்றும் பாலாஜி இருவரும் நிச்சயம் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் சீக்ரெட் ரூம் போன்ற சுவாரஸ்ய விஷயங்கள் இருக்குமா என்பது தெரியவில்லை. அது போன்ற விஷயங்களும் இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
நேற்றைய நாளில் போன்கால் ரம்யாவுக்கு வந்திருக்கிறது. நீங்கள் எப்போதும் மற்றவர்களை பற்றி பின்னாடி தான் பேசுகிறீர்கள். எப்போது நெத்தியில் அடித்தது போல பேசப்போகிறீர்கள்? என கால் செய்த நபர் கேட்டார். அப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத ரம்யா நான் இனி செய்கிறேன் என பதில் சொல்லி சமாளித்தார்.
#Day92 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/TwBIVTmI5r
— Vijay Television (@vijaytelevision) January 4, 2021
Archana shares new Bigg Boss video - Don't miss the FUN!
03/01/2021 04:41 PM
Keerthy Suresh's next film's romantic promo teaser released - check out!
03/01/2021 04:00 PM
LATEST: Aajeedh evicted from Bigg Boss 4 Tamil house || Kamal Haasan || Ramya
03/01/2021 03:17 PM
Breaking update on Sivakarthikeyan's next with Thalapathy 65 director!
03/01/2021 01:45 PM