இந்த வாரம் பாலாவை பிக் பாஸ் வீட்டில் வறுத்தெடுக்கும் வாரமாகவே மாறிவிட்டது. பிக்பாஸ் வீட்டிற்கு ஷிவானி அம்மா வந்து சென்றதில் ஆரம்பித்து, ஞாயிற்றுக் கிழமை எபிசோடு வரைக்கும் பாலாவுக்கு தான் அதிக பஞ்சாயத்துகள் வந்து சேர்கிறது. ஷிவானி அம்மா ஆரியை பார்த்து நல்லா பண்றீங்க என்றும், பாலாவை கொஞ்சமும் மதிக்காமல் ஷிவானியை திட்டி தீர்த்ததும் பாலாவுக்கு இந்த வாரம் சரியான நோஸ்கட்டாக அமைந்தது. ஷிவானியின் அம்மாவிடம் தைரியமாக பேச தெரியாமல் பம்மி விட்டு, பின்னர் ஆரியிடம் எகிறுவது தான் பாலாவின் தைரியமா என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஷிவானி அம்மாவை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பாலாவின் அண்ணன், பாலாவை நல்லாவே கொம்பு சீவி விட்டு சென்று விட்டார். நீ செய்வது சரி என்றும், அதையே தொடர்ந்து பண்ணு, பழைய பாலாவாக மாறி மிரட்டு என அவர் பேசிய பேச்சுக்களை உள்வாங்கியதன் வினை தான் இந்த வாரம் பாலாவுக்கு இப்படி அடி மேல் அடி விழுகிறது.

ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமில் வைத்து வெளியேற்றியதை போலவே பாலாஜி முருகதாஸையும் அதிரடியாக வெளியேற்றுகிறாரா கமல் என்ற பரபரப்பை இன்றைய முதல் புரமோ கிளப்பி இருந்தது. கன்ஃபெஷன் ரூமில் பாலாஜி முருகதாஸ் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த வாரம் ஆஜீத் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகிறார் என்று இணையத்தில் செய்திகள் கசிந்து வருகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று பாலாவை அதிரடியாக வெளியேற்றவே கன்ஃபெஷன் ரூம் ட்ரீட்மென்ட்டா என்பதையும் பிக்பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவேளை சீக்ரெட் ரூமில் வைத்துக் கொண்டு ஹவுஸ்மேட்கள் செய்வதை வேடிக்கை பார்க்க வைத்து விடுவாரோ கமல் என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஆரி Strategy தாண்டி வேற எங்கேயோ சென்றபோது அதை தடுத்து நிறுத்துகிறார் கமல். ஆரியை கமல் கேள்வி கேட்டதும், ரம்யா முகத்தில் அப்படி ஒரு புன்னகை. அதன் பின் பேசிய ரம்யா, ரியோவின் ஆட்டம் குறித்து கமலிடம் கூறுகிறார்.