பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் மூன்று வாரங்களின் முடிவடைய உள்ளது. அதனால் இந்த வாரம் இன்னும் நிகழ்ச்சி பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பரபரப்பை ஏற்படுத்தும் பல போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி விட்டதால் அந்த அளவுக்கு சர்ச்சையான பிரச்சனைகள் இருக்காது என்று நினைத்து ஃபைனல்ஸ் கணக்கை போட துவங்கினர் பிக்பாஸ் ரசிகர்கள். ஆனால் அதற்கு மாறாக அமைந்துள்ளது இன்று வெளியான ப்ரோமோ வீடியோக்கள். 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் புதிய நாமினேஷன் நடைபெற்றது. பாலாஜியை நாமினேட் செய்யும் போது ஆரி அதற்க்கு முந்தைய வாரங்கள் நடந்தது பற்றி அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட பாலாஜி இந்த வாரத்தை பத்தி மட்டும் பேசுங்க என கூறினார். நான் என்ன சொல்லணும் என்பதை நீ சொல்ல தேவையில்லை' என பதிலடி கொடுத்தார் ஆரி.

அதன் பிறகும் பாலாஜி பேசி கொண்டு இருந்தபோது டே வந்து சொல்லு டா என கோபமாக சொல்லிவிட்டார். அப்போது எழுந்து வந்த பாலாஜி இப்போ நீங்க ஒரு மாதிரி பேசுனீங்கல.. அதை பொறுத்துக் கொண்டிருந்தேன் இதற்கு முன்னாடி. இனி பொறுத்துக்க முடியாது என ஆரியின் முகத்திற்கு நேராகவே கூறிவிட்டார்.

தற்போது இருவரும் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். அதாவது பிக்பாஸ் வீட்டின் ஓய்வறையில் உள்ளனர். அங்கும் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. ஒருவரை ஒருவர் தாக்கி வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. குனிஞ்சு நிமிந்து வேலை செய்ய சோம்பேறித்தனபடுற நீ.. நீ என்ன எப்படி சொல்ல முடியும் என ஆரி கூற கோபித்து கொள்கிறார் பாலாஜி. 

கூட்ட முடியாது முடியாது முடியாது.. இன்னொரு தடவ சோம்பேறினு சொன்னிங்க அவ்வளவு தான் என்று மல்லுக்கு நிற்காத குறையாக பாலாஜி சண்டை போடுகிறார். சிறைக்கு வெளியே இருந்த சோம் மற்றும் ஆஜீத் சண்டை போடாதீங்க என்று கூற, அதை கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் ஆரி மற்றும் பாலாஜி.