பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் இந்த வாரம் வந்து அனைவரையும் எமோஷனல் ஆக்கி கொண்டிருக்கின்றனர். இன்று காலை வெளியான ப்ரோமோவில், கேபியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் கேபி மம்மி... என ஓடிச்சென்று கட்டிப்பிடித்து அழுகிறார். அவரது அம்மாவும் அழ தொடங்கிவிட்டார். அதன்பின் மற்ற போட்டியாளர்களிடமும் அவர் பேசுகிறார். ஆரியை நெடுஞ்சாலை படத்தில் பார்த்ததாக அவர் கூறினார். 

மேலும் கேபியை தனியாக கூட்டி சென்று பாத்ரூமில் உட்காரவைத்து அவர் சில அட்வைஸ்களையும் கொடுத்து இருக்கிறார். நீ குரூப்பாக டாஸ்க் சிறப்பாக செய்தாலும் அதில் individual ஆகவும் கொஞ்சம் போகஸ் பண்ணு என அம்மா அட்வைஸ் கூற, இங்கு இருப்பவர்கள் சிலநேரங்களில் blind.. நல்லா பண்ணாலும் அதை பாராட்ட மாட்டார்கள். சண்டை போட்டு தான் அதை வாங்க வேண்டும் என்று இல்லை. அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன் என கூறியிருந்தார் கேபி.

அந்த வரிசையில் தற்போது ஆஜித்தின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை பார்த்ததும் ஆஜித் கண்ணீர் விட்டு இருக்கிறார். அதன் பின் அனைவருடன் அமர்ந்து பேசும் போது இங்கு வந்து எத்தனை நாள் ஆகிறது. பேசவே மாட்டேங்குறான் என ஆஜித்தை செல்லமாக கண்டித்து இருக்கிறார்கள்.

அதே போல அஜித் ஒவ்வொரு முறை நாமினேட் ஆகும் போதும் அவருக்கு அதை யாரும் தெளிவாக புரியவைக்கவில்லை எனவும் ஆதங்கத்தை மற்ற போட்டியாளர்களிடம் வைக்கின்றனர். அதற்கு பதில் சொன்ன ஆரி, என் வாயை தான் அடைச்சிட்டாங்களே. அட்வைஸ் என சொல்லி. அவனிடம் பேசி தான் வாங்கிக்கட்டிக் கொண்டேன்' என சொல்கிறார்.

அது சரி தான். ஆனால் கடைசி வரைக்கும் அது அவனுக்கு புரியவே இல்லை" என்றும் அஜித்தின் குடும்பத்தினர் மிகவும் ஆதங்கத்துடன் பேசி இருப்பது இன்றைய இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. ஆஜித் அதிக ஈடுபாட்டுடன் இந்த போட்டியை விளையாடவில்லை என்கிற குற்றச்சாட்டு ஆரம்பத்தில் இருந்தே வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.