பிக் பாஸ் வீட்டில் இன்று திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் நடைபெற்று உள்ளது. அனிதா நேற்று வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியே போகப்போவது யார் என கேள்வி தற்போதே எழுந்திருக்கிறது. வழக்கமாக கன்பெக்ஷன் ரூமில் தான் நாமினேஷன் நடைபெறும் ஆனால் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்று உள்ளது. 

அதிலும் குறிப்பாக ஆரி இந்த வார தலைவர் ஆகிவிட்டதால் அவரை மற்றவர்கள் நாமினேட் செய்ய முடியாது என்கிற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதைத் தான் முதல் ப்ரோமோவில் காண்பித்திருந்தனர். நாமினேஷன் போது பாலாஜி தான் சற்று வருத்தம் அடைந்துள்ளார். கடந்த 12 வாரமாக நான் ஆரியை தான் நாமினேட் செய்தேன், இந்த வாரம் வேறு ஒருவரை தேட வேண்டுமா என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ரம்யாவை நாமினேட் செய்திருக்கிறார் ரியோ. அவர் என் எதிர் கட்சி என்கிற காரணத்தையும் அவர் கூறி இருக்கிறார். ஆஜித் மற்றும் ஷிவானியை சோம் மற்றும் கேபி நாமினேட் செய்ய, அதற்கு பதிலடியாக கேபியை ஷிவானி நாமினேட் செய்திருக்கிறார். இப்படி போட்டியாளர்கள் முட்டி மோதி நாமினேட் செய்து முடித்திருக்கிறார்கள். 

லிஸ்டில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்பது இன்றைய எபிசோடு ஒளிபரப்பானால் தான் உறுதியாகும். இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஆரியின் ஆட்டம் குறித்து ஷிவானியுடன் ஆலோசிக்கிறார் ரம்யா. ரம்யா மற்றும் ஷிவானி பேசுகையில், ஆரியின் செயல் இருவருக்குமே பிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. 

ஆரி எல்லாமே கரெக்ட்டா பண்ணனும்னு நினைத்து செய்கிறார். அது ஆடியன்ஸுக்கு பிடிக்குமா என்பது கூட தெரியவில்லை என்று ரம்யா கொளுத்தி போடுகிறார். அவருக்கென்று வரும்போது ஆரி selfish-ஆக இருப்பதாக ஷிவானி பேசியுள்ளார். தன்னுடைய plus-யும் பிறரின் minus-யும் ஆரி கூறி வருவதாக ரம்யா குற்றம் சாட்டுகிறார். இதனால் ரம்யா அடுத்த என்ன செய்யவிருக்கிறார் என்பதை காண ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.