82 நாட்களை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. நேற்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கிப்ட் கொடுக்கலாம் என கூறப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு கிப்ட் அனுப்பலாம் என பிக் பாஸ் கூறினார். அதனால் ஒவ்வொரு போட்டியாளரும் கன்பெக்ஷன் ரூமுக்கு சென்று தாங்கள் யாருக்கு கிப்ட் அனுப்புகிறேன் என்பதை கூறிவிட்டு வந்தனர். அனிதா ஆரிக்கு துணிதுவைக்கும் பிர்ஷ் கிப்ட்டாக அனுப்பினார் என்பது தான் நேற்றைய ஹைலைட்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் சில கேள்விகளை கேட்கும் வகையில் quiz நடத்தப்பட்டது. வீட்டில் எத்தனை முறை பொங்கல் செய்யப்பட்டது, எத்தனை முறை பாலாஜி மைக்கை போடாமல் சிக்கினார் என்பது போன்ற பல்வேறு விதமான கேள்விகளை கேட்டார் பிக் பாஸ். அதற்கு சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசுகளை அள்ளி செல்லும் வாய்ப்பை பிக் பாஸ் கொடுத்தார். பாலாஜி, அனிதா உள்ளிட்டவர்கள் பலரும் தங்கள் உயரத்திற்கு பரிசு பெட்டிகளை கொண்டு வந்தனர்.

அந்த பரிசு பெட்டிகளில் போட்டியாளர்களுக்கு சிறப்பான பரிசு காத்திருந்தது. போட்டியாளர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனுப்பிய கிப்ட் தான் அவை. அதை பார்த்து அனைவரும் பூரிப்பு அடைந்தனர். ரியோ தன் மகளின் போட்டோவை பார்த்து கண்ணீர் விட்டார். இப்படி வளர்ந்துவிட்டாரே என மற்றவர்களும் ஆர்ச்சர்யம் அடைந்தனர்.

நேற்றைய நாளில் பிக் பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அதில் ரியோ, சோம் மற்றும் ஆரி ஆகியோர் பங்கேற்றனர். ஸ்பூனை வாயில் பிடித்தபடி சென்று தெர்மோகோல் பந்துகளை அதில் வைத்து வாயில் பிடித்தபடியே கொண்டு சென்று ஸ்நோ மேனின் தலையில் இருக்கும் பவுலில் கொட்டி நிரப்பவேண்டும்.

அதை முதலில் நிறுப்புபவர் தான் வெற்றியாளர் என்பதால் மூன்று பெரும் வேகமாக செய்ய தொடங்குகிறார்கள். இறுதியில் இந்த டாஸ்கினை முதலில் செய்து முடித்த ஆரி தான் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் 83-வது நாளான இன்று, உலக நாயகன் கமல் தோன்றி பேசினார். போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய ரசிகர்களை பாராட்டினார் கமல். மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது என்பதை அவர்களும் உணரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்தார். இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற ஆவலில் உள்ளனர் பிக்பாஸ் பிரியர்கள்.