பிக் பாஸ் 4 இன்று 75-வது நாளை தொட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட இறுதியை எட்டிவிட்ட காரணத்தினால் இனி கொடுக்கப்படும் டாஸ்குகளும் சற்று கடினமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார கோழிப்பண்ணை டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டதாக பாலாஜி, ரம்யா மற்றும் அர்ச்சனா ஆகியோர் தேர்வான நிலையில் அவர்கள் மூவரும் இன்று அடுத்த வார கேப்டன் டாஸ்கில் பங்கேற்று இருக்கின்றனர்.

ஒரு வலை பொருத்திய போர்டுக்கு பின்னால் இருந்து கைகள் மூலமாக வலைக்கு முன் இருக்கும் பைகளை ஒவ்வொன்றாக எடுத்து வந்து முன்னர் இருக்கும் டேபிள் மேல் வைக்க வேண்டும். அனைத்து பைகளையும் முதலில் எடுப்பவர் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று பேரும் மிக வேகமாக செய்ய தொடங்குகின்றனர். அதில் அர்ச்சனா தான் அனைத்து பைகளையும் முதலில் எடுத்து முடித்து வெற்றி பெறுகிறார். அதனால் அவர் தான் அடுத்த வார கேப்டன். இதன் மூலம் அவர் நாமினேஷனில் இருந்தும் தப்பி இருக்கிறார்.

இந்த டாஸ்கில் பாலாஜி விதியை மீறி பையை அதற்கான வழியில் எடுக்காமல் நேரடியாக ஒரு வரிசையில் இருந்து மற்றொரு வரிசைக்கு எடுத்து சென்றதை மற்ற போட்டியாளர்கள் கவனித்து சொல்லி இருக்கின்றனர். ஆனால் பாலாஜி அதை ஒப்புக்கொள்ளவே இல்லை. கடந்த வார டாஸ்கிலும் பாலாஜி தவறு செய்திருந்தார். ஆனால் அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு அவரே அதை அனைவரிடமும் கூறி ரம்யாவை கேப்டனாக அறிவிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், கன்ஃபெஷன் ரூமில் பிக்பாஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ரம்யா பாண்டியன். எனக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பேன். கோபம் பற்றி பேசிய ரம்யா, அழுகைக்கு இரண்டு காரணங்களை தெரிவித்தார். உன்மை மற்றும் பொய் என இரண்டு அழுகையும் இந்த வீட்டில் பார்க்கலாம் என தெரிவித்தார். 

ஒரு கட்டத்தில் ரம்யா பிக்பாஸையே கேள்வி கேட்ட ஆரம்பித்து விட்டார். ரம்யா வெளியே வரும் போது அருகில் அமர்ந்திருந்த ஆரி மற்றும் அனிதா ரன்னிங் கமெண்ட்ரி தந்தனர். ரம்யா பாண்டியனின் இந்த க்யூட்டான ப்ரோமோ இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.