பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய கோழி பண்ணை டாஸ்க் ஒருவழியாக முடிவடைந்தது. எதார்த்தமாக ஆரம்பித்தாலும் வழக்கம் போல் சண்டையில் முடித்தனர் போட்டியாளர்கள். முதலில் ஷிவானி மற்றும் ரியோவுக்கு முட்டை வழங்கப்ட்டது. அதில் ஷிவானியின் முட்டையை பாலாஜி மிகவும் எளிதாக தொட்டுவிட்டார். அருகில் அமர்ந்து இருந்த அவர் வேகமாக சென்று ஷிவானியை ஏமாற்றி தொட்டுவிட்டார்.

ரியோ முட்டையை பாதுகாத்து கொண்டு இருந்தபோது நரிகள் கூட்டமாக அவரை சுற்றி வளைத்து முட்டையை தொட முயற்சி செய்தனர். அனிதா தான் இரண்டாவதாக சென்று முட்டையை தொட விருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஆரியும் அங்கு சென்று முட்டையை தொட்டுவிட்டார். இதனால் multiple approach என கூறி ரியோ பணத்தை தர மறுத்தார்.

அதன் பின் ஏன் ஒரே நேரத்தில் அங்கு சென்றீர்கள் என ஆரியிடம் அனிதா சண்டை போட்டார். அதன் பின் எல்லோரும் நரியாகவே மாறிவிட்டார்கள் என சொல்ல, உங்களுக்கு தான் இங்கு மூளை இருக்கு, நாங்க எல்லாம் முட்டாள் பசங்க என ஆரி ரம்யாவை தாக்கி பேசினார். அடுத்து அர்ச்சனா முட்டையை தொட்டது யார் என சண்டை வெடித்தது. அர்ச்சனா சற்று வித்தியாசமாக முட்டையின் மீதே படுத்துவிட்டார். அப்போது முதல் ஆளாக ரியோ தொட சென்றார். அவர் தொட்டுவிட்டாலும் அர்ச்சனா அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின் சோம் அதை தொட்டுவிட்டார். அவர் தொட்டதால் தான் முட்டை உடைந்தது என அர்ச்சனா குற்றம்சாட்ட, சோம் அதை மறுத்தார். இதை பற்றி அர்ச்சனா - சோம் இடையே வாக்குவாதம் நீண்ட நேரமாக நடந்தது.

அனிதாவை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து அனிதா பேசினார். கணவர் அருகில் இருந்தால் என்ன சொல்வீர்கள் என பிக் பாஸ் கேட்க முதலில் மன்னிப்பு கேட்பேன். அழக்கூடாது, சும்மா கோபப்பட கூடாது என்று தான் சொல்லி அனுப்பினார். அடுத்து அர்ச்சனா கன்பெக்ஷன் ரூமிற்கு வந்தார். நீங்கள் இப்போது உங்கள் வீட்டிற்கு செல்கிறீர்கள் என் பிக் பாஸ் ஒவ்வொன்றாக கூறி வந்தார். அப்போது அர்ச்சனா கதறி அழ தொடங்கிவிட்டார். அதன் பின் பிக் பாஸ் வீடு பற்றி கேட்டபோது, நான் அன்பால் ஜெயிக்கலாம் என நினைத்தேன், ஆனால் இது இல்லாமல் போய்விடுமோ என பயமாக இருக்கிறது என்று கூறினார். 

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பாலாவின் விளையாட்டை பாராட்டி பேசினர். அப்போது பேசிய ஆரி, தம்பி பாலா ரொம்ப சுவாரஸ்யமா விளையாடினான் என்று கூறினார். பிறகு பேசிய பாலா, ஷிவானியை பாராட்டி பேசினார். ரூல்ஸ் பிரேக் செய்யாமல் ஷிவானி விளையாடியதாக பாலாஜி கூறினார்.