பிக் பாஸ் 4ல் ஆரிக்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அவர் நேர்மையாக இருப்பதாகவும் அவருக்கு ஆர்மி எல்லாம் தொடங்கி சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு அணி கோழிகளாகவும், மற்றொரு அணி நரிகளாகவும் மாறி இந்த டாஸ்கை விளையாடி இருக்கின்றனர்.

இந்த போட்டியாவது காமெடியாக போகும் என எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான். ஆரி மற்றும் அர்ச்சனா இடையே சண்டை வெடித்து இருக்கிறது. நரி முட்டையை எடுக்க கூட்டமாக தான் வரும்' என அர்ச்சனா சொல்ல, அதற்கு ஆரி கோபமாக நீங்க இப்படி அறிவித்துவிட்டு வராமல் இந்த மாதிரி விளையாடினால்..என பேச தொடங்கி ஒரு கட்டத்தில் கோபத்தில் கத்த தொடங்கிவிட்டார்.

எப்படி ஆடணும்னு சொல்லுங்க என அர்ச்சனா கேட்க. எப்படி ஆடணும்னு நான் காட்றேன் இப்போ என காட்டமாக தெரிவித்திருப்பது இன்றைய இரண்டாம் ப்ரோமொ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், ரியோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் அர்ச்சனா. என்ன strategy-னு உங்கிட்ட சொல்லணும்ற அவசியம் எனக்கு இல்லை என்று அர்ச்சனா கூற, மனம் உடைந்து விட்டார் ரியோ. 

பிக்பாஸ் சீசன் துவங்கியதிலிருந்தே அக்கா தம்பி சென்டிமென்ட், அன்பு கேங் என ஆட்டமே போட்டனர் ரியோ மற்றும் அர்ச்சனா. சமீபத்தில் நிஷா வெளியேறிய பிறகு அன்பு கேங்கில் பல மாற்றம் ஏற்பட்டுள்ளது. சரி அர்ச்சனா பஞ்சாயத்து முடிந்தவுடன் பாலாவிடம் பேசத்துவங்கிய ரியோவிற்கு ஏமாற்றமே எட்டியது. 

Fair points பற்றி எடுத்துரைத்தார் பாலா. அதன் பிறகு ரியோவை வெறுப்பேற்றும் வகையில், டேமேஜ் ஆன பீசு நானு என்று சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் பட பாடலை பாடி செல்கிறார். ரியோ தான் இந்த வார டார்கெட்டா ? என்று கணித்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.