பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்படுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி பிக்பாஸ் வீடு கோழிப்பண்ணையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு பாதி ஹவுஸ்மேட்ஸ் கோழிகளாகவும் ஒரு பாதி ஹவுஸ்மேட்ஸ் நரிகளாகவும் உள்ளனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் தொடர்பான கண்டிஷன்களை வாசித்தார் ரியோ. அதன்படி கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகளின் கை படாத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

முட்டைகளை தொட வரும் நரிகளின் வாலை கோழி பிடித்து விட்டால் அந்த நரி அந்த சுற்றிலிருந்து வெளியேற வேண்டும். கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகள் தொடாதவாறு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் எந்த நபரிடம் அதிக பிக்பாஸ் கரன்சி உள்ளதோ அந்த நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும். இப்படியாக உள்ளது இந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் விதிமுறைகள். இதில் பாலாஜி, ரம்யா, ஆரி, உள்ளிட்டோர் கோழிகளாக உள்ளது தெரியவந்துள்ளது.

இதேபோல் அர்ச்சனா, ரியோ, சோம், அனிதா ஆகியோர் நரிகளாகவும் உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் நரியாக உள்ள அர்ச்சனா கீழே விழுந்து வாரியதும் தெரியவந்துள்ளது. இந்த வாரம் நாமினேஷனில் 7 பேர் இடம் பெற்றுள்ள நிலையில் இதில் அதிக கரன்சிகளை பெறும் நபருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், கோழியிடம் இருந்து முட்டைகளை எடுக்க நரி கூட்டமாக தான் வரும் என்று ஆரம்பிக்கிறார் அர்ச்சனா. declare பண்ணாம வரக்கூடாது என்று கூறுகிறார் ஆரி. Declare முறை ரூல் புக்கில் இல்லை என்று எடுத்துரைக்கிறார் ரம்யா. எதையும் காதில் வாங்காமல், இப்போ பாருங்க நான் விளையாடி காண்பிக்கிறேன் என்று கிளம்புகிறார் ஆரி. இன்றைய பஞ்சாயத்துக்கு கன்டென்ட் தயார் என கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் பிரியர்கள். 

நேற்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டதாம். ஒரு சோப் பிராண்டை விளம்பரப்படுத்தும் விதமாக தான் இந்த டாஸ்க் வழங்கப்பட்டதாம். அதில் ஒருவர் நடந்து செல்ல வேண்டும் என்றும், எதிரணியில் இருப்பவர்கள் பந்துகளை கொண்டு அவர்களை அடிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. எந்த அணி குறைவான நேரத்தில் நடந்து முடிகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என கூறப்பட்டது.

இந்த டாஸ்கில் அர்ச்சனா மற்றும் அனிதா ஆகியோர் தான் நடுவராக செயல்பட்டனர். பாலா டாஸ்கில் பங்கேற்று நடந்து சென்றபோது அவர் மீது எத்தனை பந்துகள் பட்டது என்பது பற்றி வாக்குவாதம் வெடித்தது. பாலாஜியை மீண்டும் முதலில் இருந்து நடக்க தொடங்குங்கள் என அர்ச்சனா கேட்டார். அதற்கு பாலாஜி நீங்க refree தான், இந்த வீட்டு ஓனர் இல்லை என கூறி நோஸ்கட் தந்தாராம். இதெல்லாம் ஏன் ப்ரோமோவில் வரவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.