நேற்று பிக்பாஸ் வீட்டில் அனிதா மற்றும் ரியோவின் சண்டை முத்தியது. வாக்குவாதத்தில் துவங்கிய இந்த சண்டை, பெரிய பஞ்சாயத்தாக மாறியது. ரியோ அனிதாவிடம் சமாதானம் பேச சென்றார். அப்போது அனிதாவிடம் சண்டை போட்டவர்கள் பலர் வெளியில் போய்விட்டார்கள் என ரியோ கூறி கிண்டல் செய்தார். சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா என ஒரு பெரிய லிஸ்டையே ரியோ கூறினார்.

பிக் பாஸ் வீட்டில் வாரம் தோறும் வித்யாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிராமம், கால் சென்டர், ரோபோ vs மனிதர்கள் டாஸ்க் என மிகவும் வித்தியாசமாக டாஸ்குகள் வழங்கப்பட்டாலும் போட்டியாளர்கள் அதில் குரூப்பிஸம் காரணமாக மிகவும் சொதப்பலாகவே விளையாடி வருகின்றனர். குறிப்பாக அர்ச்சனா கேங் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் காப்பாற்றி கொண்டதை பார்த்தோம்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீடு கோழிப் பண்ணையாக மாறி இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் சிலர் கோழிகளாகவும் மற்றவர்கள் நரிகளாகவும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். கோழிகள் தங்களின் தங்க முட்டைகளை நரிகள் தொடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த டாஸ்கில் நரிகளின் வாலை கோழிகள் தொட்டுவிட்டால் போட்டியில் இருந்து அந்த நரி வெளியேறவேண்டும். மேலும் முட்டைகளை தொடாதவாறு நரியுடன் கோழி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அதற்காக பிக் பாஸ் கரன்சியும் வழங்கப்பட்டு உள்ளது. இறுதியில் யாரிடம் அதிக கரன்சி உள்ளதோ அவருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளனர்.

இதனால் இந்த டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்கள் முட்டைக்காக அடித்துக் கொண்டிருப்பது தற்போது வெளிவந்திருக்கும் 72ம் நாள் முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. மேலும் அனிதா கீழே விழுவது போல் தெரிகிறது. டாஸ்க்கின் போது அடிபடுவது சகஜம் தானே என கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.