பிக்பாஸ் 4-ல் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி நிஷா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். அவர்கள் இருவருமே அர்ச்சனாவின் அன்பு கேங்கை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க இன்று திங்கட்கிழமை என்பதால் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்ற உள்ளது. இந்த முறை யாரும் எதிர்பார்க்காத விதமாக ஓபன் நாமினேஷனாக நடந்தது.

பாலாஜி இதற்காக தான் இதுவரை காத்திருந்தததாக கூறி ரியோவை நாமினேட் செய்கிறார். ரியோவை ஆரி, அனிதா, ரம்யா, ஆகியோரும் நாமினேட் செய்கின்றனர். பதிலடியாக ரியோ கேங் ஆரியை டார்கெட் செய்கிறது. ரியோ அனைவர் முன்பும் வந்து பேசும் போது பாலாஜியை தாக்கி பேசுகிறார். மத்தவங்க எல்லாரும் இப்படி தான் இருக்காங்க. நான் அதை அக்செப்ட் பண்ணிக்கனும் என அவர் மாற்றிக்கொண்டார். இந்த கேமில் மாறவே கூடாது இப்படி தான் இருக்கனும் என சொன்னாங்க என ரியோ பாலாவை தாக்குகிறார்.

அதே போல பாலா பேசும்போது ரியோவை வெச்சி செய்கிறார். ஒரு விஷயம் தப்பு என நமக்கு தெரிகிறது. அவர்கள் தப்பு பன்றாங்க. அது acceptance. இப்படி கருத்தை தப்பாக புரிந்துகொண்டு தவறான விளக்கம் கொடுப்பதால் நான் ரியோவை நாமினேட் செய்கிறேன் என பாலாஜி கூறுகிறார்.

பிக்பாஸ் வீட்டை பார்க்கும் போது, ரியோ அண்ட் கோ-விற்கு இந்த வாரம் சிக்கல் காத்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், அனிதா மற்றும் ரியோ இந்த இருவரின் சண்டை அனல் பறக்கிறது. ரியோவிற்கு தைரியம் இல்லை என்று அனிதா கூற, what do you mean ? என்று கேட்கிறார் ரியோ. 

ஆரம்பத்தில் சில காரணங்களை கூறிய ரியோ, அதற்காக அனிதாவை நாமிநேட் செய்யவில்லை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். உங்க கிட்ட இருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று கிண்டலடித்த ரியோ, கடைசியில் அனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டார். தைரியம் இல்லாமல் கதவை தாண்டியா வெளியே சென்றேன் என்று கோபத்தின் உச்சிக்கு செல்கிறார் ரியோ.