விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் நாள்தோறும் எதாவது சண்டை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ரியோ கேங் சேர்த்து வைத்துக்கொண்டு மற்றவர்களை டார்கெட் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்துகொண்டு தான்இருக்கிறது. மேலும் ரியோவை வெளியில் பார்ப்பதற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கும் போதும் அதிகமான வித்தியாசம் தெரிகிறது. 

இந்த வாரம் முழுதும் அனிதா மற்றும் ரியோ இடையே சண்டை வெடித்தது. இந்த வார ரோபோ டாஸ்கில் யார் சுவாரஸ்யம் குறைவாக இருந்தார்கள் எனகேட்டதற்கு அனிதாவை தான் ரியோ டார்கெட் செய்தார். ரோபோக்களுக்கு பெயர் வைத்தது அனிதா தான் என ரியோ குற்றம்சாட்டினார். அனிதா சிறையில் இருந்த போதும், அனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இந்நிலையில் இன்றைய மூன்றாம் ப்ரோமோவில், ரியோவிற்கு செக்மேட் வைத்துள்ளார் கமல் ஹாசன். கார்டன் ஏரியாவில் கேபிக்கு என்ன அட்வைஸ் கொடுத்தீங்க ? என்ற கமல் கேட்கையில் வாயடைத்து காணப்படுகிறார் ரியா. இன்றைய எவிக்ஷனில் ரியாவின் பெயர் அடிபடவில்லை என்றாலும், கமலிடம் ரியோ மாட்டியது பார்ப்போருக்கு என்டர்டெயின்மென்ட்டாக உள்ளது. 

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று ஆரம்பத்திலே அறிவித்திருந்தார் கமல்ஹாசன். சொன்னது போலவே முதல் எவிக்ஷனாக ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்றைய எபிசோடில் நிஷா தான் எவிக்ட் ஆகிறார் என்று கூறப்படுகிறது. 

நிஷா நாமினேஷனில் இருக்கும் போது ஷிவானி காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறி குரூப்பிசம் இல்லை என்று காட்ட முயற்சிக்கிறார் ரியோ. பாலாஜியும் ஷிவானி காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறுகிறார். நிஷா பெயரை கூறும் கேபி, அவர் போக வேண்டும் என்றும் கூறுகிறார். அனிதா மட்டுமே அக்கா இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். தொடர்ந்து ஆடியன்ஸை பார்க்கும் கமல், எவிக்ஷன் கார்டையும் பார்த்துவிட்டு, இதயத் துடிப்பை செக் பண்ணிக்கிறீங்களா என்று ஹவுஸ்மேட்ஸை கேட்டார். 

ரியோ செய்த காரியத்தால் கேபிக்கு தண்டனை வழங்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் பிக்பாஸ் பிரியர்கள். எதுவாக இருந்தாலும் சரி, அர்ச்சனா வாங்கி கட்டிக்கொண்டது பலரும் ரசிக்கும் வகையில் அமைந்தது.