இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கமல் சொன்னதில் இருந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பதற்றத்தில் தான் இருக்கின்றனர். குறிப்பாக அர்ச்சனா தன் கேங் உறுப்பினர்கள் வெளியில் போய்விடக்கூடாது என வருத்தப்பட்டு ரியோவை கட்டிப்பிடித்து அழவே தொடங்கிவிட்டார்.

நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ளார். அதை கமல் அறிவிக்கும் முன் போட்டியாளர்களிடம் பேசி இருப்பது தற்போது வெளிவந்திருக்கும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

ரம்யா, ஷிவானி, நிஷா, கேப்ரியலா மற்றும் சோம் ஆகிய 5 பேர் தற்போது நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நிலையில் அதில் இருந்து யார் காப்பாற்றப்பட வேண்டும் என கமல் கேட்கிறார். அப்போது ஷிவானியின் பெயரை ரியோ மற்றும் பாலாஜி ஆகியோர் கூறுகின்றனர். நிஷா போகனும் என கேபி சொல்கிறார், ஆனால் அவர் இருக்க வேண்டும் என அனிதா விருப்பப்படுகிறார்.

இதில் யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது இன்று இரவு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தெரிந்துவிடும். சமூக வலைத்தளத்தில் நிஷா தான் இன்றைய எவிக்ஷன் என கூறி வருகின்றனர் இணையவாசிகள். நம்பமுடியாத விஷயம் என்றாலும், நெட்டிசன்களின் கணிப்பு பல முறை சாத்தியமாகியுள்ளது. நேற்று ரமேஷ் தான் வெளியேறுவார் என்பதையும் இணையவாசிகள் தான் கொளுத்தி போட்டனர். 

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், மைக் சரியாக போட்டுள்ளீர்களா என்று கமல் கேட்கிறார். அதற்கு ரியோ மற்றும் அர்ச்சனா...ஓ சரியா போட்டுள்ளோம் என்று கூற, நடந்த உண்மையை போட்டுடைக்கிறார் கமல். அர்ச்சனா மைக்கை சரியாக மாட்டாமல் சில இடங்களில் ஏமாற்றும் விதத்தில் மைக்கை கீழே தள்ளி வைத்துவிட்டு பேசுவது, கழற்றி வைத்துவிட்டு பேசுவது உள்ளிட்ட தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்ட அர்ச்சனா கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். 

சோம சேகரிடம், நிஷாவிடம், ஷிவானியிடம் ஒரு விஷயம் கூறும் போது அதை கழட்டி வெச்சிட்டு பேசுரீங்க. மைக்கை கழட்டி வைப்பது ஒரு விதிமுறை மீறல். இதற்கு முன் அப்படி செய்தவர்களை வெளியில் கூட அனுப்பி இருக்கோம் என கூறி எச்சரித்து இருக்கிறார்.