பிக் பாஸ் 4 தற்போது 67-வது நாளை எட்டி இருக்கிறது. நிகழ்ச்சியை பரபரப்பாக்க பல்வேறு விதமான டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற வாரம் கொடுக்கப்பட்ட கால் சென்டர் டாஸ்க் சொதப்பிய நிலையில், இந்த வாரம் புதிய மனிதா டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சனாவிடம் அப்பா மரணம் பற்றி பேசியது பிரச்னையை ஏற்படுத்திய நிலையில் நேற்று அணிகள் மாற்றப்பட்டு இருந்தது. அர்ச்சனா டீம் மனிதர்களாகவும், பாலாஜி டீம் ரோபோக்களாகவும் மாற்றப்பட்டு இருந்தன. 

அர்ச்சனா டீம் பாலாஜி டீமை கலாய்த்துக் கொண்டிருப்பது நேற்று முழுவதும் காட்டப்பட்டு இருந்தது. சண்டையும், சமாதானமும் ஒருபுறம் இருக்க பாலாஜி கண்ணீர் விட்டிருப்பது பார்த்து அனைவரும் ஷாக் ஆனார்கள். குறும்படம் is not a joke.என்னை roast பண்ணும்போது பாத்துட்டு தானே இருந்தீங்க. யாராவது எழுந்து பாலா விளையாடிய சைடில் எங்களுக்கு தெரியல கண்ணனுக்கு என சொன்னார்களா? அந்த இடத்தில் நான் எவ்வளவு அதிக பிரசங்கி மாதிரி தெரிஞ்சிருப்பேன். 

ஒருத்தராவது எனக்கு support -ஆக பேசுனாங்களா. அது என் மனத்தில் குத்திட்டு இருக்கு. சனிக்கிழமை நடந்த சம்பவத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை என கண்ணீர் மல்க பேசினார். ரோபோவாக இருந்த ஆஜித்தும் அதிக நேரம் தாக்குபிடிக்கவில்லை. ஜித்தன் ரமேஷ் சொன்ன சின்ன ஜோக்கிற்கு அவர் சிரித்துவிட்டார். மேலும் அவரது வாயில் முட்டையை உடைத்து ஊற்றுவதாக அர்ச்சனா மிரட்டியதும் அவர் தன் சட்டையில் இருக்கும் இன்னொரு ஹார்டையும் கொடுத்து விடுவதாக கூறினார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், ஆரியின் கேம் எனக்கு பிடிக்கவில்லை என்று ரியோ ஆரம்பிக்கிறார். அதனால் ஆரியை ரியோ நாமினேட் செய்கிறார். ஆரி பிரேக் செய்வதற்கு ஒரு வழியை கடைபிடிக்கிறாராம் அது ரியோவிற்கு பிடிக்கவில்லை என்று விவரிக்கிறார். ரோபோவாகவும் சரி, மனிதர்களாகவும் சரி... ஆரியின் ஆட்டம் சற்று சுவாரஸ்யம் இல்லை என்று சோம் கூறுகிறார். 

அதன் பிறகு வந்த ரமேஷ் மற்றும் ஆஜீத், அனிதாவின் ஆட்டத்தில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது என கூறினார்கள். அதற்கு அனிதா அமைதியாக அதை ஏற்றுக்கொண்டார். பின் வந்த அர்ச்சனாவும் அனிதாவையே நாமினேட் செய்தார். காரணம் involvement குறைவாக இருந்தது என போட்டுடைத்தார். இதற்கு சரி ஒப்புக்கொள்கிறேன் என அனிதா கோபத்துடன் கூறுகிறார்.