கடந்த இரண்டு வாரங்களாக Luxury பட்ஜெட்டுக்கு எந்த ஒரு புதுமையான டாஸ்க்கும் வழங்கப்படாமல் கால் சென்டர் டாஸ்க்கே நீண்டு கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று புதிய மனிதா என்ற வித்யாசமான டாஸ்க் வழங்கப்பட்டது. அதன்படி இதில் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு அணி மனிதர்களாகவும் மற்றொரு அணி இயந்திரங்கள் ஆகவும் இருக்க வேண்டும். 

இதில் மனிதர்கள் அணிக்கு பாலாஜி கேப்டனாகவும் மற்றொரு அணியான இயந்திரங்கள் அணிக்கு அர்ச்சனா கேப்டனாகவும் இருப்பார் என்றும் அவரவர் விருப்பப்படி தங்களது அணியை உருவாக்கி கொள்ளலாம் என்று பிக்பாஸ் தெரிவித்தார். மேலும் இந்த டாஸ்கின்படி வீட்டில் எந்த வேலையானாலும் அது இயந்திரமே செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு முறை அலாரம் அடித்தவுடன் மனிதர்களாக இருக்கும் போட்டியாளர்கள் இயந்திரங்களிடம் மகிழ்ச்சி, கோபம், துக்கம் என இதில் ஏதாவது இரண்டை வரவழைக்க முயற்சி எடுக்க வேண்டும். 

மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு முறை அலாரம் அடித்து பின்பு முடியும் தருவாயில் குறைந்தது இரண்டு இயந்திரங்களையாவது செயழிழக்க செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் மனிதர்களிலிருந்து யாரேனும் ஒருவர் இயந்திரமாக மாற்றப்படுவார். மேலும் இதில் இயந்திரங்களுக்கு இரண்டு ஹார்ட் வழங்கப்பட்டு, அதில் அவர்கள் ஒரு உணர்ச்சியை வெளிக் கொண்டு வரும்போது ஒரு ஹார்ட்டை தூக்கிவிட வேண்டும்.

இதையடுத்து பாலாஜி தலைமை தாங்கும் மனிதர்கள் அணியில் ரியோ, அனிதா, ஆரி, நிஷா, ஆஜித் ஆகியோரும் அர்ச்சனா தலைமையில் இயங்கும் இயந்திரங்கள் அணியில் ரம்யா, சோம், ரமேஷ், ஷிவானி மற்றும் கேப்ரியல்லா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதையடுத்து ரோபோக்கள் போன்று உடையணிந்து வந்த அணியை மனிதர்கள் அணி உசுப்பேத்த தொடங்கினர். இதில் முதலிலேயே அர்ச்சனாவை எவ்வாறு சிரிக்க வைக்கவோ அல்லது கோபப்பட வைக்கவோ வேண்டும் என்பதை முடிவு செய்தனர்.

தன் முயற்சியை கைவிடாத நிஷா தொடர்ந்து அர்ச்சனாவிடம் அவரது அப்பாவின் மரணம் பற்றி கேட்டார். ஆனாலும் அர்ச்சனா அசராமல் அப்படியே நின்றார். அருகில் இருந்து கேட்ட சோம் கடுப்பானது போல நடித்தார். அதையடுத்து நிஷா உங்களது முகத்தில் நான் பலமுறை உணர்ச்சிகளை பார்த்தேன் என்று கூறி அவரிடம் இருந்த மற்றொரு ஹார்ட்டையும் எடுத்துக் கொண்டார். 

அதன் பின் தான் அர்ச்சனா சண்டை போட தொடங்கினார். என் அப்பா மரணம் கேம் இல்லை, இப்படியும் விளையாடனுமா என கூறி நிஷாவை திட்டிவிட்டு உடைந்து அழுதார். அவரை அருகில் இருப்பவர்கள் சமாதானம் செய்தாலும் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

இதற்கெல்லாம் சேர்த்து தற்போது வெளியான ப்ரோமோவில் ரோபோவான நிஷாவை பழிக்கு பழி வாங்ககிறார் அர்ச்சனா. தவறாக ஆங்கிலத்தில் பேசிய நிஷாவை கிண்டலும் அடிக்கிறார் அர்ச்சனா. அருகில் ரம்யா மற்றும் கேபி விளையாட்டை வேடிக்கை பார்த்து ரசித்து வருகின்றனர்.