பிக்பாஸ் வீட்டில் புதிதாக பல பஞ்சாயத்துகள், சுவாரஸ்யங்கள் என களைகட்டி வருகிறது. 65 நாட்களை கடந்து செல்வதால் போட்டியாளர்கள் டாஸ்க்கில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்காக புதிய மனிதா என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் என்றும், ஒரு அணியினர் ரோபோ போல செயல்பட வேண்டும், அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் தான் செய்ய வேண்டும். 

மனிதர்கள் டீம் அவர்களை டார்கெட் செய்து கோபம், துக்கம், சிரிப்பு ஆகியவற்றில் ஏதாவது இரண்டு எமோஷன்களை வெளிக்கொண்டு வர வைக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த டாஸ்க்கிற்கான டீமை அர்ச்சனா மற்றும் பாலாஜி இருவரும் தேர்ந்தெடுத்தனர். பாலாஜி புத்திசாலித்தனமாக ரியோ, நிஷா போன்றவர்களை மனிதர்கள் டீமில் தேர்ந்தெடுத்தார். இதனால் அர்ச்சனாவுக்கு எதிராக அவர்களை செயல்பட வைக்க முடியும் என தோன்றியதோ என்னவோ.

டீம் பிரித்த பிறகு அர்ச்சனா டீம் ரோபோ உடையில் வெளியில் வந்து நின்றதும் அவர்களுக்கு மனிதர்கள் டீம் பெயர் வைத்தார்கள். அர்ச்சனாவுக்கு Bossy ரோபோ, சோம் Puppet ரோபோ என பெயர் வைத்தனர். அர்ச்சனா முட்டை சாப்பிட மாட்டார் என்பது தெரிந்து அவரை டார்கெட் செய்ய அவர் முகத்தில் முட்டையை பூசும்படி செய்தனர் ஆரி, பாலாஜி உள்ளிட்டவர்கள். ஆனாலும் அவர் அசராமல் அவர்கள் சொல்வதையும் செய்தார்.

அர்ச்சனாவை உடைக்க எதிர் டீமில் இருக்கும் நிஷா அர்ச்சனாவின் அப்பாவுக்கு நடந்த விபத்து பற்றி பேசினார். நிஷா கேட்ட கேள்விகளுக்கு அர்ச்சனா தன் மனதில் இருந்த துக்கத்தை மறைத்து ரோபோ போலவே பதில் அளித்தார்.ஆனால் அவர் சோகம் ஆகிவிட்டார் என கூறி அவரது பேட்ஜை எடுத்தனர்.

நிஷா ஒருகட்டத்தில் ஆரியுடன் கன்னாபின்னா வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை போட்டார். ஆனால் உண்மையில் அது அருகில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் ரோபோவை கோபப்படவைக்க தான். ரமேஷும் அதை கண்டுபிடித்து விட்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பாலாஜியை கேப்டனாக கொண்ட அணி இயந்திரங்களாக மாறி டாஸ்க்கில் இறங்குகின்றனர். 

இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், பாலாஜி சிரித்து கொண்டே இருக்கிறார். நான் யார் தெரியுமா.. நான் தான் டைட்டில் வின்னர் என்று நகைச்சுவையாக கூறுகிறார். அனிதா ஆர்வம் இல்லாமல் டாஸ்க்கில் இறங்குவது போல் தெரிகிறது. ரியோ மற்றும் ரம்யா இடையே வாக்குவாதம் நடக்கிறது. அடுத்த என்ன என்பதை வரும் ப்ரோமோக்களில் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.