பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு மிகவும் வித்யாசமான டாஸ்குகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 வாரமாக கொடுக்கப்பட்ட கால் சென்டர் டாஸ்க் மிகவும் சொதப்பலாகவே முடிந்தது. அதில் பேசிவைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டது பற்றி கமல் ஹாசனும் கோபமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த வாரம் புதிய மனிதா என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும். இயந்திரங்கள் அதாவது ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார். மனிதர்கள் அணி இயந்திரங்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

இந்த டாஸ்கில் அர்ச்சனா முகத்தில் முட்டையை பூசிக்கொள்ள வைக்கின்றார் ஆரி. அப்போது அர்ச்சனா கண்ணில் இருந்து கண்ணீர் வருவது முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார் அர்ச்சனா. அர்ச்சனாவின் இச்செயலால் அதிர்ந்து போய் உள்ளது பிக்பாஸ் வீடு. 

ரியோ கூறிய கருத்திற்கு எதிர்த்து பேசிய அர்ச்சனா, பச்சை பொய் ரியோ நீ என்று வெளிப்படையாக கூறினார். சமாதானம் செய்ய சென்ற ரியோவிடம் நன்றி ரியோ...நன்றி ரியோ என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார் அர்ச்சனா. அதன் பின் நீ கேட்காமல் பேசுகிறாய் ரியோ என்று கூற, அருகில் இருந்த பாலாஜி இது கேம் தானா என்று ஆறுதலாக பேசுகிறார். அதை சற்றும் காதில் வாங்காமல், இது கேம் கிடையாது என்று புலம்பி தள்ளுகிறார் அர்ச்சனா. 

எதனால் இந்த பிரச்சனை உருவாகியது. அப்படி என்ன நடந்தது டாஸ்க்கில் என்ற ஆர்வத்தில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள். அன்பு என்ன ஆனது ? அக்கா தம்பி ஏன் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று குழப்பத்தில் தவிக்கின்றனர் ரசிகர்கள். நான் தானா பேசினேன் என்று நிஷா கூற, யாரு பேசினால் என்ன நிஷா என்று குண்டை தூக்கி போடுகிறார் அர்ச்சனா.