பிக்பாஸ் வீட்டின் நேற்றைய காலை ஆரி, அனிதா, பாலாஜி, ஷிவானி ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசினர். அப்போது ஆரி, ஒருத்தர ஒருத்தர் காப்பாத்தி விளையாடுறாங்க. அவங்க எல்லாம் உள்ள இருக்காங்க. இன்டிவிட்ஜூவலா விளையாடுறவங்கலாம் வெளியே போயிட்டு இருக்காங்க என்று அர்ச்சனா கேங்கின் தவறான விளையாட்டை பற்றி ஆதங்கத்துடன் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசும் அனிதா, என்ன அப்புறம் இது கேம். எதுக்கு விளையாடணும் என விரக்தியாக சொல்ல, தொடர்ந்து பேசும் ஆரி, இந்த வாரம் நாமினேஷன்ல 7 பேர் இருக்காங்க. எல்லாருமே ஒரு இடத்துல விளையாடிக்கிட்டு, இன்டிவிட்ஜூவல் பிளேயர்ஸ் வெளியே போயிட்டு இருந்தாங்கன்னா.. அந்த குரூப் ஸ்ட்ராங்க் ஆயிட்டே உள்ளே இருந்துச்சுன்னா அவங்களுக்கு போடுறவங்கதான் ஓட்டு போடுவாங்க என்று உண்மையை கனக்கச்சிதமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

சனம் வெளியே போயிட்டாங்கன்னு நான் அமைதியா உட்காந்திருந்தா நாளைக்கு எனக்கும் அதான் நடக்கும் உனக்கு அதான் நடக்கும் என்று கூற, அதனைக் கேட்கும் பாலாஜி, இதையேதான் 2 வாரத்துக்கு முன்னாடி சொன்னேன் ஹவுஸ்ல பெரிய இம்பேலன்ஸ் வரபோகுதுன்னு என்று தன் பங்குக்கு சொன்னார். ஒரு கட்டத்திற்கு மேல் வெளிப்படையாக பேசிய ஆரி, உனக்கு ஷிவானி மீது அன்பு இருக்கிறது. ஆனால் அதை கேமில் எடுத்து வருவதில்லை. ஒருத்தருக்காக ஒருத்தர் விளையாடுறது, அன்பு வெச்சிக்கிறது அது எதற்காக? என ரியோ கேங் பற்றி மறைமுகமாக பாலாஜியிடம் பேசுகிறார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், புதிய மனிதா டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பாலாஜி மனிதர்களின் தலைவராகவும், அர்ச்சனா இயந்திரங்களின் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் வீடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்பட அரங்கு போல் காட்சியளிக்கிறது. இதனால் நிச்சயம் டாஸ்க்கில் ரஜினிகாந்த் போல் யாரவது நடித்து காண்பிப்பார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள். 

ரமேஷிடம் சென்ற அனிதா, ராஜா வீட்டு கன்னுக்குட்டி ரொம்ப சீரும் என்கிறார். அர்ச்சனாவிடம் முட்டையை எடுத்து காண்பிக்கிறார்கள். அதை உடைத்து தன் மீது பூசிக்கொள்கிறார் அர்ச்சனா. அப்போது கண்ணீர் சிந்திய அர்ச்சனாவை நோட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இந்த ப்ரோமோ ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதில் அதிக கன்டென்ட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.