பிக் பாஸ் என்றாலே எப்போதும் ஞாயிற்றுக்கிழமை மிகவும் பரபரப்பாக இருக்கும். அதற்கு காரணம் எலிமினேஷன் தான். வெளியே போகப்போவது யார் என்பது பற்றி பெரிய குழப்பம் நீடித்து வருகிறது. நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் ரம்யா ஆகியோரை கமல் காப்பாற்றினார். அதன் பின் மீதம் இருக்கும் ஐந்து பேரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என கமல் அறிவித்தார்.

இந்நிலையில் இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் இறுதியாக இருக்கும் சனம், அனிதா, ஷிவானி ஆகியோரில் யார் காப்பாற்றப்பட வேண்டும் என கமல் அனைத்து போட்டியாளர்களிடமும் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பலரும் சனம் ஷெட்டியின் பெயரை தான் தெரிவித்து இருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக கமல் அதிகம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஷா, ரியோ, நிஷா உள்ளிட்டவர்கள் சனம் காப்பாற்றப்பட வேண்டும் என கூறிய நிலையில், ஆரி மட்டும் அனிதா வெளியே போய்விடுவார் என கூறிவிட்டார். அதை கேட்டு மற்றவர்கள் சற்று ஷாக் ஆகிவிட்டார்கள். கமல் கேட்ட கேள்வியை விட்டுவிட்டு இவர் எலிமினேஷனை பற்றி பேசுகிறாரே என யோசித்தார்கள். 

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஹெல்த் செக்கப் போனது குறித்து விசாரிக்கிறார் கமல். அப்போது பேசிய அர்ச்சனா, பெர்ஃபார்மன்ஸ் ஹெவியானதினால் சந்தேகம் அதிகமாயிடுச்சு என்று கூறுகிறார். நான் ஒரு ரகசியம் சொல்கிறேன் என்று பேசிய கமல், நிஷா சேஃப் என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் குதிக்கின்றனர் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ். 

நிஷா இந்த வாரம் வெளியேறப்போவதில்லை என்ற செய்தி தெரிந்தவுடன் அர்ச்சனா ஆனந்த கண்ணீரில் மிதக்கிறார். நிஷாவை விட அர்ச்சனா மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று எடுத்துரைக்கிறார் கமல். நிஷாவை நாங்கள் தொலைத்து விட்டோமோ என்ற பயம் இருந்ததாக அர்ச்சனா கூறுகிறார். நீங்களும் தேடுனீர்களா என்று கமல் ஹாசன் கூறுகிறார். எவிக்ஷனில் இருந்து தப்பிய நிஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் பிக்பாஸ் விரும்பிகள்.