கடந்த வாரம் தொடங்கிய கால் சென்டர் டாஸ்க் ஒருவழியாக நிறைவடைந்த நிலையில், அதில் போட்டியாளர்களின் performance அடிப்படையில் ஒன்று முதல் பதிமூன்று வரை ரேங்க் வழங்கவேண்டும் என நேற்று முன்தினம் பிக் பாஸ் கூறினார். போட்டியாளர்கள் குரூப்பாக் பிரிந்து இருப்பதால் குரூப்பிஸம் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது.

போட்டியாளர்கள் விவாதம் நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில் அதிகம் பிரச்சனைகளும் வெடித்தது. முதலிடம் யாருக்கு என முதலில் பஞ்சாயத்து நடந்தது. அதில் இறுதியில் ஆரிக்கு மெஜாரிட்டி அடிப்படையில் முதலிடம் வழங்கப்பட்டது. அதன் பின் இரண்டாம் இடம் யாருக்கு என சண்டை தொடங்கியது. அனிதா 2ம் இடத்தில் நின்றுகொண்டிருந்த. 

அப்போது சனம் ஷெட்டிக்கு இரண்டாம் இடம் வழங்கலாம் என ஆரி பரிந்துரைத்தார். அவருக்கு 5 பேர் வாக்குகளும் அளித்தனர். அதனால் அனிதாவை வெளியில் அனுப்பிவிட்டு சனம் ஷெட்டியை அங்கே நிற்க வைத்தனர். அதன் பின் அனிதா மூன்றாவது இடத்திற்கு முயற்சித்தார், ஆனால் பாலாஜி முருகதாஸ் அந்த இடத்தை பிடித்துக்கொண்டார். இதனால் விரக்தியில் அனிதா வெளிநடப்பு செய்து விட்டார்.

குறிப்பாக அர்ச்சனாவின் லவ் பெட் கேங் தான் பல விஷயங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்கள் குழுவாக இருப்பதால் மற்ற போட்டியாளர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது, நாமினேஷன் உள்ளிட்ட விஷயங்களில் அந்த குழுவினர் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு காப்பாற்றிக்கொள்வதால் கேம் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் சொல்லப்படுகுறது.

இந்நிலையில் அர்ச்சனா கேங் அனைவரும் சேர்ந்து அறந்தாங்கி நிஷாவை தாக்கி பேசுவது தற்போது வெளிவந்து இருக்கும் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. நிஷாவின் காமெடி மோசமாக இருக்கிறது என பலரும் அடிக்கடி அவரை கிண்டல் செய்து வரும் நிலையில், அதை பற்றி தான் அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டவர்கள் பேசி இருக்கிறார்கள். 

நேற்றைய எபிசோடில் கால் சென்டர் performance ரேங்கிங்கில் நிஷா தானாகவே சென்று கடைசி இடத்தில் நின்றுகொண்டது குறிப்பிடத்தக்கது. தான் வீக் என நிஷா தானாகவே நினைத்துக்கொள்கிறார் என ஜித்தன் ரமேஷ் குற்றம்சாட்டி இருக்கிறார். நகைச்சுவையை என்ஜாய் செய்துவிட்டு போய்டுங்க. நல்லா இல்லை என அடிக்கடி சொல்லாதீங்க என அர்ச்சனா கூறினார். ஒரு முறை, இருமுறை ஓகே.. ஆனால் மூன்றாவது முறை அவராகவே புரிந்து அதை கேட்டிருக்க வேண்டாமா. எப்போது தான் அவருக்கு தெரிய வரும் என ஜித்தன் ரமேஷ் மேலும் கேள்வி கேட்டிருக்கிறார்.