பிக் பாஸ் நான்காவது சீசன் தற்போது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. புயல், மழை என்று இருந்தாலும் ஹவுஸ்மேட்ஸ் இயல்பு நிலைக்கு திரும்பி விளையாடி வருகின்றனர். வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் இடையே அதிக பிரச்சனைகள் வருவதற்கு காரணம் குரூப்பிஸம் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படி இருப்பதால் பிக் பாஸ் அளிக்கும் டாஸ்குகளில் பல போட்டியாளர்கள் தங்களது கேங்கில் இருக்கும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுவது நடக்கிறது. இதனால் சுவாரஸ்யம் குறைவாகவே தெரிகிறது.

கால் சென்டர் டாஸ்கில் சிறப்பாக பேசிய போட்டியாளர்கள் மற்றும் தங்கள் முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் இந்த டாஸ்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டது.

பிக் பாஸ் அந்த ரேங்க் வரிசையை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் அவர்கள் கருத்தை தெரிவித்து முடிவெடுக்கும் பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்படியாக வாக்குவாதம் ஆரம்பத்ததிலிருந்தே யாரும் விட்டுக்கொடுக்காமல் அவர்கள் இடத்தை முடிவு செய்து கொண்டு விவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுதே பாலாஜி, சனம் இடையே மோதல் ஆரம்பித்தது.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே சனம் ஷெட்டி-பாலாஜி இடையே சண்டைகள் நடந்தும், அடிக்கடி வம்பிழுப்பதுமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த வரிசைப்படுத்தும் டாஸ்க்கில் சனம் எனக்கு முதலிடம் தான் வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த பாலாஜி கால் சென்டர் டாஸ்க்கில் கிடைத்த ஒரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தாமல் failure ஆன உனக்கு எதுக்கு முதலிடம் 13 வது இடத்துக்கு போய் நில் என கடுப்பாகி கத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று 61-ம் நாளில் வெளியான முதல் ப்ரோமோவில், ஆரி செய்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர் அனிதா மற்றும் பாலாஜி. சனம் ஷெட்டி சரியாக விளையாடவில்லை, அவருக்கு ஏன் ஆதரவு தரீங்க என்று அனிதா ஆரியிடம் கேட்கிறார். பாலா அருகில் அமர்ந்து இது நியாயமே இல்லை என்று எடுத்துரைக்கிறார். இதனால் அனிதா மற்றும் ஆரி நடுவே பிரச்சனை வெடிக்குமா என்று பார்த்து வருகின்றனர் பிக்பாஸ் பிரியர்கள்.