விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 2-வது வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்தவர் சுசித்ரா. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் முதல் போட்டியாளராக ரேகா வெளியேறியதை தொடர்ந்து முதல் வைல்டு கார்டு என்ட்ரி ஆக அர்ச்சனா என்ட்ரி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக சுசித்ரா என்ட்ரி ஆனார். 

மேலும் சுசித்ராவின் என்ட்ரி பிக் பாஸ் வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. அவர் வந்தவுடன் நடைபெற்ற நீதிமன்ற டாஸ்கில் கூட அவர் பாலாஜி பக்கம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என்று ஒரு பேச்சு அடிபட்டது. மேலும் அதனை கமலே வார இறுதி நாட்களில் நேரடியாக அவரிடம் கேட்டார். ஆனால் கடந்த சில நாட்களாகவே அவருக்கும் பாலாவுக்கும் இடையே ஒரு சிறிய பிளவு ஏற்பட்டது தெளிவாக தெரிந்தது.

மணிக்கூண்டு டாஸ்க்கில் கடைசி இடம் பிடித்த பாலாஜி, ரம்யா, சுசித்ரா ஆகிய மூவரில் இருந்து இருவரை ஜெயிலுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்குமாறு பிக்பாஸ் அறிவித்ததை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து சுசித்ரா மற்றும் பாலாஜியை தேர்ந்தெடுத்தனர். அதைத்தொடர்ந்து பிக்பாஸும் அவர்கள் இருவரையும் ஜெயிலுக்கு அனுப்பினார். ஜெயிலில் இருந்த சுசித்ராவின் பேச்சை கேட்டா பாலாஜி எனக்கு இவரது பேச்சை தொடர்ந்து கேட்டால் பைத்தியம் பிடித்துவிடும் என்று புலம்ப ஆரம்பித்தார்.

உண்மையில் சுசித்ராவின் நடவடிக்கை பார்வையாளர்களுக்கும் சற்றே சலிப்பு தட்டியது என்பதால் என்னவோ அவர் இந்த வாரம் போட்டியாளர்களின் கவனத்தை பெற முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் தீபாவளியை முன்னிட்டு நாமினேசன் நடைபெற்றாலும் பின்னர் அது கேன்சல் செய்யப்பட்டது. அதனால் கடந்த வாரம் எந்த ஒரு போட்டியாளரும் வெளியேறவில்லை. அதை தொடர்ந்து கடந்த வாரம் இறுதியிலே கமலஹாசன் இந்த வாரம் கட்டாயம் நாமினேஷன் உண்டு என்று தெளிவுபடுத்தினார். 

இந்நிலையில் இந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற நாமினேசனில் மொத்தம் 9 நபர்கள் சுசித்ரா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அடிப்படையில் அவரை நாமினேட் செய்தனர். சுசித்ராவை தொடர்ந்து அனிதா, ரியோ, சம்யுக்தா, பாலாஜி, சோம், ஆரி ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில், போட்டியாளர்கள் எதிர்பார்த்தது போலவே சுசித்ராவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவுள்ளதாக கமல் இன்று அறிவித்தார். வார இறுதி நாளான இன்று கமல் பாலாஜி, சோம், ரியோ, ஆரி ஆகிய நால்ரும் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்ததைத் தொடர்ந்து மீதமிருந்த சம்யுக்தா, அனிதா மற்றும் சுசித்ராவில் யார் காப்பாற்றப்படுவார் என்று கமல் போட்டியாளர்களிடம் கேட்டார். அப்போது பெரும்பான்மையான போட்டியாளர்கள் சம்யுக்த்தா என்று தெரிவித்தனர். போட்டியாளர்களின் ஆசைப்படியே சம்யுக்த்தா காப்பாற்றப்பட்டு மீதமிருந்த இருவரில் சுசித்ரா வெளியேறியதாக கமல் அறிவித்தார்.

போட்டியாளர்களின் பிரியா விடை பெற்று கிளம்பிய சுசித்ராவிடம், கமல் இவ்வளவு சீக்கிரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவேன் என்று நினைத்தீர்களா என்று கேட்டார். அப்போது அவர் கட்டாயம் இல்லை என்றும், இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்துப் போயே உள்ளே சென்றேன் என்றும் ஆனால் எதிர்பாராத விதமாக சீக்கிரம் வெளியேற நேர்ந்தது என்றார். மேலும் உலக நாயகன் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் உங்களது கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம் என்று கூறினார். இந்நிலையில் படத்தின் முதல் ப்ரோமோ இன்று வெளியானது. அதில் நாமினேஷன் போது ஆரி கோபப்படுகிறார். ரியோ மற்றும் ரமேஷ் பார்த்து விட்டு செல்கின்றனர்.