மேலும் இந்த டாஸ்கில் சொதப்பிய இருவரை தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதனால் அனைவரும் சேர்ந்து பாலாஜி மற்றும் சுசித்ராவை ஓய்வறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அங்கே வெளியே நின்று பாலாவை பார்த்து சிரிக்கிறார் ஷிவானி. டாஸ்கில் புள்ளிகள் குறைவதால் இந்த வார எவிக்ஷனில் பாலாவின் பெயர் இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். 

அதனைத் தொடர்ந்து இந்த டாஸ்கில் வெற்றி பெற்ற சோம், சம்யுக்தா, அர்ச்சனா, கேப்ரில்லா, ஆரி மற்றும் ரியோ ஆகியோர் அடுத்த வார தலைவர் தேர்தலுக்கான போட்டியில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று பிக்பாஸ் அறிவித்தார்.மேலும் இந்த லிஸ்டில் சோம், கேப்ரியல்லாவைத் தவிர அனைவரும் இதற்கு முன்னர் வீட்டின் தலைவராக பொறுப்பு வகித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சுசித்ரா இந்த வீட்டில் இருப்பதைக் காட்டிலும் வெளியுலகில் இருப்பது எவ்வளவோ மேல் என்றும், இங்கு அனைவரும் போலியாக நாடகம் ஆடுவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், பாலா என்னிடம் வந்து ஏன் என்னையே எல்லாரும் டார்கெட் செய்வதாக கூறி புலம்பியதாகவும் அதற்கு உன்னை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்றும் அதனை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன் என்றார்.

இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஓய்வறையில் இருக்கும் பாலா, சுசித்ராவிடம் புலம்பி தள்ளுகிறார். முதலில் ஜாலியாக பாடல் பாட துவங்கியவர், ஆஜீத் தான் என்னோடைய குரூப் லீடர், எப்படி இந்த முடிவு எடுக்கலாம் என்று கேட்கிறார். அதன் பின் ஷிவானிக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்று கூறுகிறார். 

காலை வெளியான ப்ரோமோவில், பாலாவிற்கு தண்டனை என்றதுடன் ஷிவானி மகிழ்ச்சியாக காணப்பட்டார். தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் ஷிவானியுடன் சண்டை போடுவாரா பாலா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். மேலும் சுசித்ராவிடம் உன்கூட உள்ள அனுப்பி என்ன சாவடிக்கிறாங்கப்பா கொந்தளிகிறார் பாலாஜி.