பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் 4ல் இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் இந்த டாஸ்க் கொஞ்சம் டஃப்பான டாஸ்க்காக பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் 45 மணிநேர மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஹவுஸ்மெட்ஸ் உடலையும் மூளையையும் வருத்திக்கொண்டு ஈடுபட்டுள்ளனர். இதுவரை பேசியே மொக்கை போட்டு வந்த ஹவுஸ்மெட்ஸ் தீயாய் வேலை செய்வதை பார்த்த நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். போட்டியாளர்கள் அனைவரும் தொடர்ந்து 45 மணி நேரம் டாஸ்க் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மணிக்கூண்டு டாஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் ஐந்து அணிகளாக பிரிந்து இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும். காற்று, மழை என அனைத்தையும் தாங்கி தான் டாஸ்க் செய்திருக்கிறார்கள்.

போட்டியாளர்கள் அவர்கள் நேரத்தை நிர்ணயிப்பதற்கு ஏற்ப பிக்பாஸ் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகள் நடைபெறுகிறது. இதில் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தப்படி போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில் அர்ச்சனாவுடன் சண்டை போடுகிறார் நிஷா. அதன் பின் வந்த சோமுடனும் சண்டைக்கு செல்கிறார். 

ஒரு கட்டத்திற்கு மேல் நிஷா அர்ச்சனாவின் தலை முடியை பிடித்து சண்டை போடுவது போல் ப்ரோமோ அமைந்தது. சமாதான படுத்த வந்த ரமேஷிடமும் மற்ற ஹவுஸ்மேட்ஸிடமும் நான் சும்மா ஃபன்னுக்கு செய்தேன் என்று எடுத்துரைக்கிறார் நிஷா. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், இப்போது தான் பிக்பாஸ் வீடு சூடுபிடிக்கிறது. இது போன்ற என்டர்டெயின்மென்ட் தான் தேவை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.