பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி இன்று நாற்பத்தி நான்காவது நாளை தொட்டிருக்கிறது. இதுவரை போட்டியாளர்களுக்கு எளிமையான டாஸ்க்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. அதனால் கஷ்டமான டாஸ்குகளை எப்போது தான் தருவீர்கள் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

கடந்த வாரம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பெரிதாக எதுவும் டாஸ்க் வழங்கப்படவில்லை. மேலும் எலிமினேஷனும் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். நேற்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் ப்ராஸஸ் நடைபெற்றது. ஹவுஸ்மெட்ஸ் கூறிய காரணங்களையும் பட்டியலிட்டார் பிக்பாஸ். 

அதாவது, மாத்தி மாத்தி பேசுறாங்க, ஓவர் ரியாக்ட் பண்றாங்க, காதல் கண்ண மறைக்குது, சிடுமூஞ்சி மேக்ஸ், 4 பேரோட கன்ஃபர்ட் ஸோன், பர்ஃபாமன்ஸ் கம்மி, நான் சிங்குல போகுது என ஹவுஸ்மெட்ஸ் கூறிய காரணங்களை கூறினார். அதனை மற்ற ஹவுஸ்மேட்ஸ் ரசித்து கைகளை தட்ட, எப்பா.. கேட்டுக்குங்கப்பா.. இங்க காதல்லாம் எவனும் பணணல.. அப்படி எதாவது நினைப்பு இருந்து.. என் காதுல கேட்டுச்சுன்னா, நான் ஏதாவது கேட்பேன்.. என எச்சரித்தார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் கடினமாக டாஸ்குகளை வழங்க தொடங்கியிருக்கிறார். போட்டியாளர்கள் அனைவரும் தொடர்ந்து 45 மணி நேரம் டாஸ்க் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மணிக்கூண்டு டாஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் ஐந்து அணிகளாக பிரிந்து இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும். காற்று, மழை என அனைத்தையும் தாங்கி தான் டாஸ்க் செய்திருக்கிறார்கள்.

அவர்கள் நேரத்தை நிர்ணயிப்பதற்கு ஏற்ப பிக்பாஸ் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகள் நடைபெறுகிறது. இதில் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தப்படி போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த டாஸ்க்கில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கேஸ் மற்றும் தண்ணீர் வழங்கப்படுவதாக தெரிகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் ரயில் எஞ்சின் கொண்டு வரப்பட்டுள்ளது. பாலாஜி சுண்டல் விற்கிறார். பெண் போட்டியாளர்கள் குடத்தில் தண்ணீர் தூக்கி செல்கின்றனர்.

இந்த போட்டி தற்போது வெளிவந்திருக்கும் முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. இதை பார்த்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.