ஹானஸ்ட்டுக்கும் ஹானஸ்ட்டிக்கும் என்ன வித்தியாசம் என கேபியிடம் கமல் கேட்கத் தொடங்க, அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட். எனக்குத் தெரியுமே, என கமல் உட்கார்ந்து கொண்டே பஞ்ச தந்திரம் ஸ்டெப் போடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த நாளில் இரண்டாம் ப்ரோமோவாகும். நடிகர் கமலுக்கு மீண்டும் நல்லா வசதியா உட்கார்ந்து கொண்டு வறுத்தெடுக்க சூப்பரான நாற்காலி ஒன்றை விஜய் டிவி கொடுத்து இருக்கிறது. பல மணி நேரங்கள் நடத்தப்படும் நிகழ்ச்சியில், மற்ற போட்டியாளர்கள் எல்லாம் சோபாவில் உட்கார்ந்து இருக்க கமல் மட்டும் நிற்பதில் என்ன நியாயம். 

முதல் புரமோவில் பாலாவை வறுத்தெடுத்த கமல், இரண்டாவது புரமோவில் கேபியுடன் எகிறி சண்டை போட்ட ஷிவானியை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார். வழக்கமா சன்டே எபிசோடு எலிமினேஷனுடன் களைகட்டும், இந்த வாரம் தான் எலிமினேஷன் இல்லை என சோர்ந்து போன ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக கமல் பண்ணும் பஞ்சாயத்து அமைந்துள்ளது.

ஹானஸ்ட்டுக்கும் ஹானஸ்ட்டிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க கேபி என பாலாவின் இரண்டாவது பிரச்சனையில் கமல் கை வைக்க, பாலா திருடுனதை நான் பார்த்துட்டேன். ஹானஸ்ட்டா சொல்லு பாலான்னு சொன்னேன் அவனும் சொல்லிட்டான். அப்புறம் வெளியே போயிட்டு மறுபடியும் உள்ளே வந்து சண்டை போட்டான் என கேபி புட்டு புட்டு வைத்தார்.

வெளியே என்ன நடந்தது தெரியுமா? என கமல் கேட்க, தனக்கு தெரியாது என கேபி ஓப்பனாக சொல்ல, எனக்குத் தெரியுமே என கமல் போடும் பஞ்ச தந்திரம் ஸ்டெப்புக்கு, எடிட்டர் நல்லாவே மியூசிக் சேர்த்துள்ளார். ஒட்டுமொத்த போட்டியாளர்களும், கமலை ரசிக்க, ஒரு அம்மாவின் தலை மட்டும் தொங்கிப் போச்சு.

ஆர்வ மிகுதியில் சொல்லுங்க சார் என கேபி கேட்க, ஷிவானி தான் அந்த பிரச்சனையை வெளியே ஆரம்பித்தார். இதனை கண்ட ரசிகர்கள் நிச்சயம் ஷிவானியை கேள்வி கேட்பார் என்று ஆர்வமாக உள்ளனர். மேலும் இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவராக நிஷா இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.