பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பாட்டியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என கண்டிஷன் போட்டார் பிக்பாஸ். ஆனால் பாலாஜியோ, சோமிடம் இருந்த சொத்து பத்திரத்தை திருடி வைத்துக் கொண்டு எல்லோரும் அவரை கெஞ்ச வேண்டும் என கண்டிஷன் போட்டார்.

பாட்டியா அர்ச்சனா, அனிதா, சனம், நிஷா என பலரும் எவ்ளோவோ எடுத்து சொல்லியும் கெஞ்சியும் பார்த்தனர். ஆனால் அதனை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளவில்லை பாலாஜி. பத்திரம் வேண்டுமென்றால் நான் சொல்வதை கேளுங்கள் என்றார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில், பாலாஜி டாஸ்க்கை புரிந்துகொள்ளாமல் தவறாக நடந்துகொண்டதால் லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்களை மொத்தமாக குறைத்து பூஜ்ஜியம் வழங்கியுள்ளார் பிக்பாஸ். மேலும் பாலாஜியையும் டாஸ்க்கை புரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், திருடனும் அவரது கூட்டாளிகளும் முன்வந்து அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் என்று பிக்பாஸ் கூறினார். அதை ஏற்று கேபி, சோம் மற்றும் ரம்யா முன் வந்தனர். இதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் சிரித்தபடி அதிர்ச்சியில் இருந்தனர். எங்களுக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க் இது என்று எடுத்துரைக்கிறார் ரம்யா. 

ஜாக்கெட்டில் வைத்து ஓரமாக எடுத்துச் சென்றேன் என சோம் விளக்க, ரியோ அங்கிருந்து கிண்டலடிக்கிறார். எடுத்ததற்கு பாராட்டு..ஆனால் எடுத்ததை தொலைத்ததற்கு அடிதான் என்று சோமை துரத்தி அடிக்கிறார். பிறகு கையில் கடித்தும் வைக்கிறார் ரியோ. பிக்பாஸ் வீட்டில் அமைதியாக இருந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்க்கிலும் அசத்தும் சோம் சேகரை பாராட்டி வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள். மேலும் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோ மிகவும் நகைச்சுவையாக உள்ளதென கமெண்ட் செய்து வருகின்றனர்.