பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் அர்ச்சனா பாட்டியாகவும் ஹவுஸ்மெட்ஸ் பிள்ளைகள் மற்றும் பேர பிள்ளைகளாகவும் இருந்தனர். பாட்டியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்றும் பாட்டி விரும்புவர்களுக்கு தங்களின் சொத்துக்களை பிரித்து கொடுப்பார் எனறும் அறிவித்தார் பிக்பாஸ். 

முதல் நாள் டாஸ்க்கில் ஓரளவுக்கு பாட்டியை சந்தோஷப்படுத்த முயற்சி செய்தனர் ஹவுஸ்மெட்ஸ். இரண்டாம் நாளான நேற்று சோம் வைத்திருந்த பத்திரத்தை திருடிய பாலாஜி, யார் முதலில் திருடியது என்று எனக்கு தெரிய வேண்டும் என்று பாட்டிக்கு டிமாண்டுகளை வைத்து பிரச்சனை செய்தார். எல்லா சொத்தையும் தனக்கே வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

பாட்டியான அர்ச்சனா மற்றும் ஹவுஸ்மெட்ஸ் எவ்வளவோ கெஞ்சியும் அவர் பத்திரத்தை கொடுக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போயினர் ஹவுஸ்மெட்ஸ். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் முழுக்க முழுக்க பிக்பாஸே பேசியிருக்கிறார். அதவாது, பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில், பாட்டியை அதிகமாக சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதை சரியாக புரிந்துகொள்ளாமல் தவறான பாதையில் பயணம் செய்து இந்த டாஸ்க்கை முறையா முடிக்க தவறிட்டீங்க.

அப்போது பேசும் பாலாஜி, பிக்பாஸ் அந்த லாக்கர்லேருந்து நான் எடுக்கல பிக்பாஸ் என்று கூறுகிறார். தொடர்ந்து பேசிய பிக்பாஸ், டாஸ்க்கை முறையாக முடிக்காததால் லக்சுரி பட்ஜெட்டில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்றார். இதனால் மொத்த ஹவுஸ்மெட்ஸும் அதிர்ச்சியாகினர். ஒவ்வொருவரின் ரியாக்ஷனும் ஒவ்வொரு மாதிரியாக இருந்தது. 

தொடர்ந்து பேசிய பிக்பாஸ், பாலா இந்த டாஸ்க்க முறையா செய்ய தவறிட்டீங்க.. முதல்ல டாஸ்க்க முழுசா புரிஞ்சுக்குங்க என்கிறார். இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் காணப்பட்டார் பாலா. தீபாவளிக்குள் ஏதாவது சுவாரஸ்ய கன்டென்ட்டுகள் கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.