பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர் ஷிவானி நாராயணன் கடந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறினார். டிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகளில் அவர் மிக சிறப்பாக விளையாடிய நிலையிலும் அவர் எலிமினேட் செய்யப்பட்டது அவருக்கு சற்று ஏமாற்றம் அளித்தது.

இது பிக் பாஸின் இறுதி வாரம் என்பதால் இதற்கு முன்பு எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் பலரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இருக்கிறார்கள். அர்ச்சனா தொடங்கி அனிதா சம்பத் வரை முன்னாள் போட்டியாளர்கள் பலரும் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஷிவானி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மட்டுமே தற்போது வரை பிக் பாஸுக்கு வராமல் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்று ஷிவானி ஸ்டோர் ரூம் வழியாக வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். பாயை சுற்றி அவரை அனுப்பி இருக்கிறார்கள். அவரை பார்த்ததும் மற்றவர்கள் சர்ப்ரைஸ் ஆகி இருக்கிறார்கள். பாலாஜிஇடம் ஹாய் சொல்கிறார் ஷிவானி. அவருடன் பேச அருகில் சென்று நின்றார். ஆனால் ஷிவானியை கண்டுகொள்ளாமல் வேண்டுமென்றே ஒதுங்கிவிட்டு அந்த இடத்தில் இருந்து நடையை கட்டுகிறார் பாலாஜி. 

இதனால் நெட்டிசன்கள் தற்போது பாலாஜியை கலாய்த்து வருகின்றனர். இது வரை யார் வந்தாலும் கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருந்த பாலாஜி ஷிவானி வந்ததும் துள்ளிக்குதித்து எழுந்து வந்து நிற்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். 

நேற்றைய நாளில் முதலில் 1 லட்சம் ருபாய் பெட்டி வந்த நிலையில் அதை யாருமே எடுக்கவில்லை. அதற்கு பிறகு 5 லட்சம் ருபாய் பணத்துடன் பெட்டியை கொண்டு வந்து வைத்தார்கள். அதை யார் எடுப்பார்கள் என அனைவரும் பார்த்துகொண்டிருந்த நிலையில் உடனே கேபி அங்கு சென்று அதை எடுத்துக்கொண்டார். உடனே ரியோவும் வந்து தான் அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவதாக கூறினார். ஆனால் கேபி அதை கொடுக்க முன்வரவில்லை. அந்த பெட்டியை அவர் கீழே கூட வைக்கவில்லை. நான் எடுக்கவில்லை என்றால் ரியோ அதை எடுத்துக்கொள்வார் என கூறினார்.

இதை எடுத்துக்கொள்வதால் என்னை நான் குறைவாக நினைக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அதை தாண்டி ஒன்னு இருக்கிறது. அதனால் தான் இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தை கேபி கூறியிருந்தார்.