பிக் பாஸ் சீசன் 4-ல் இன்று பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. இதற்கு முன் இல்லாத வகையில் இந்த நான்காவது சீசன் போட்டியாளர்களுக்கு தான் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என பல பண்டிகைகளை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கொரோனா காரணாமாக மிக தாமதமாக பிக் பாஸ் நான்காவது சீசன் தொடங்கியதால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்றும் சொல்லலாம்.

போட்டியாளர்கள் அனைவரும் உறியடி, slow சைக்கிள் ரேஸ் உள்ளிட்ட விஷயங்கள் பொங்கல் ஸ்பெஷலாக கொண்டாடி வருவது இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. மேலும் இரண்டாவது ப்ரோமோவும் சற்று முன்பு வெளிவந்து இருக்கிறது அதில் போட்டியாளர்களுக்கு பெரிய வாய்ப்பாக பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் போக வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

ஒரு லட்சம் தொடங்கி ஐந்து லட்சம் வரை ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனுப்பப்படும். அதை எடுத்துக்கொண்டு வெளியில் போகிறவர்கள் போகலாம் என வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆரி அந்த பெட்டிக்கு அருகில் சென்று நிற்பதும் இந்த ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

இணையத்தில் நேற்று இது பற்றி ஒரு வதந்தியும் பரவியது. ரம்யா பாண்டியன் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார் என பரபரப்பான செய்தி ஒன்று பரவியது. ஆனால் அது வதந்தி என ரம்யா பாண்டியனின் அட்மின் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் இன்றைய நாள் அதிகம் எதிர்பார்ப்பில் உள்ளது. பொங்கல் பண்டிகை ஒருபுறம் இருக்க, பணப்பெட்டி மறுபுறம் உள்ளது. யாருக்கு எவ்வளவு பணம் என்பதும், யார் பணத்தை வேண்டாம் என்று வீட்டில் இருக்கப்போகிறார்கள் என்பதும் இன்றைய எபிசோடில் தெரிந்து விடும். பணத்தை எடுப்பவருக்கு ஃபனல்ஸ் செல்லும் வாய்ப்பு இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.