பிக் பாஸ் இன்று 100-வது நாளை தொட்டிருக்கிறது. நேற்று நான்கு முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தனர். அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் ரேகா ஆகியோர் வந்திருந்த நிலையில் இன்று மேலும் சில விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். சம்யுக்தா தான் அது. பிக்பாஸ் வீட்டை விட்டு போனவுடன் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் சம்யுக்தா. 

வந்ததும் வராததுமாக சம்யுக்தா ஆரி விஷயத்தைப் பற்றி தான் நக்கலாக பேசியிருக்கிறார். ஏற்கனவே ஆரி மற்றும் சம்யுக்தா இடையே அதிக மோதல் நடைபெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரி இடையே நடந்த சண்டையின்போது ரம்யா இடையில் வந்து பாலாஜியை அங்கிருந்து கூட்டிச் சென்றார். அப்போது ரம்யா ஒருதலை பட்சமாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார் ஆரி.

அந்த விஷயத்தைப் பற்றி தான் சம்யுக்தா நக்கலாக இன்று பேசியிருக்கிறார். அடிதடி நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் நான் அங்கிருந்து பாலாவை கூட்டி வந்தேன். ஆனால் நீங்கள் பாலாவுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என அவர் கூறிவிட்டார் என ரம்யா தன் தரப்பு நியாயத்தை கூறினார். அதன் பிறகு பேசிய பாலாஜி லைட்டாக ஹாய் மற்றும் பாய் கூறினால் கூட குரூப் என சொல்லிவிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

வீட்டுக்குள் வந்ததும் பாலாஜியை தான் சம்யுக்தா குழந்தை என கூறி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி இருக்கிறார். பாலாஜி அவரைப் பார்த்து சற்று கண் கலங்கி விட்டார் என்பதை முதல் ப்ரோமோவில் பார்த்திருந்தோம். 

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஆரி ப்ரோ ஒகேவா இல்லையா என்று கேபி கேட்க...அருகில் இருந்த ரியோ பதிலுக்கு ஏதோ பேச, ஆரியின் முகம் வாடுகிறது. நான் ஏதாவது தப்பா பேசிட்டனா பிரதர் என்று ரியோ மீண்டும் கேட்கிறார். இந்த வாக்குவாதம் வெடிக்க துவங்கியது. 

அதன் பின் பேசிய ஆரி, நீங்கள் பேசிய தொனி வேறு மாதிரி இருந்தது. நான் இடைல வந்தது தான் தப்பு என்று மாறி மாறி மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றனர். ஆரம்பத்திலிருந்தே ஆரி மற்றும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சண்டை வெடித்து கொண்டு தான் இருக்கிறது. பாலாஜி ஆரி மோதல் அடிக்கடி நேர்ந்தாலும், அது சுமூகமாக போய் விடுகிறது. இத்தனையும் கடந்து இறுதியில் யார் வெல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.