கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஃபினாலே வாரமான இந்த வாரத்தில் ஆரி, பாலாஜி, ரியோ, கேபி, சோம், ரம்யா என 6 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டுகளாக உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். 

அந்த வகையில் நேற்று அர்ச்சனா, நிஷா, ரேகா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இன்று சம்யுக்தா மற்றும் சுசி என்ட்ரி தந்து இன்பதிர்ச்சி தந்தனர். சம்யுக்தாவை பார்த்தவுடன் ஆனந்த கண்ணீரில் மிதக்கிறார் பாலாஜி. உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் சாம் என்று கூறுகிறார் பாலாஜி. அதன் பின் ரம்யா மற்றும் பாலாஜி இருவரும் அமர்ந்து கொண்டு சம்யுக்தாவிடம் பேசிக்கொண்டிருக்கின்றனர். 

பிக் பாஸ் வீட்டில் தான் செய்த விஷயங்களுக்கு வெளியில் என்ன ரெஸ்பான்ஸ் கிடைத்தது என தெரிய பாலாஜி இன்று வெளியில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தவர்களிடம் பல்வேறு விஷயங்களை கேட்டார்.

அவர் கோபப்படாமல் இருந்திருக்கலாம் என்று தான் அர்ச்சனா உள்ளிட்ட பலரும் அவருக்கு அட்வைசாக அவருக்கு கொடுத்தனர். ஆனால் யாரும் நேரடியாக வெளியில் அவருக்கு இருக்கும் ரெஸ்பான்ஸ் பற்றி சொல்லிவிடவில்லை. ரேகா பேசும்போது நீ இருப்பதால் தான் மற்றொருவர் புகழ் பெற முடிகிறது. வில்லன் இருந்தால் தான் ஹீரோவுக்கு வேலை என கூறினார். அப்போ நான் வில்லனா என அதிர்ச்சியுடன் கேட்டார் பாலாஜி. அதற்கு ரேகா நீ ஹீரோ மற்றும் வில்லன் இரண்டும் தான் என கூறி சமாளித்தார்.

பாலாஜி ஏற்கனவே கடந்த வாரம் முழுவதும் கடும் வருத்தத்தில் தான் இருந்தார். தனது கோபத்தால் கெரியரே முடிந்துவிட்டது என்கிற வருத்தத்தில் தான் இருந்ததாக அவர் கூறினார். ஆனால் அவர் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டு பைனலுக்கு முன்னேறியதாக கமல் அறிவித்ததும் எமோஷ்னல் ஆகி அதற்காக அவர் நன்றி கூறினார்.

அது மீண்டும் பிறந்தது போல இருந்தது என பாலாஜி மிகவும் உருக்கமாக பேசினார். ஆனால் இன்று விருந்தினர்களாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் அர்ச்சனா, ரேகா, நிஷா ஆகியோர் இவரிடம் கூறி இருக்கும் விஷயங்கள் கடும் அப்செட் ஆக்கி இருக்கிறது. இறுதியில் யார் வெல்வார்கள் என்ற ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்து வருகிறது.